எழும்பூர் மருத்துவமனையில் ஒரேநாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதி? பின்னணி என்ன?
சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இன்று ஒரேநாளில் 100க்கும் அதிகமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவி வருகிறது. சமீப நாள்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பெருகி வருகிற நிலையில் வெளியாகியிருக்கும் இச்செய்தி குறித்து அதன் இயக்குநர் எழிலரசியிடம் பேசினோம்… “ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் வழக்கமாகவே பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் காய்ச்சல் ஏற்படுவது இயல்பானது. டெங்குக் காய்ச்சலும் இந்தக் காலகட்டத்தில்தான் அதிகளவில் பரவும். இதனைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அதற்கான தயாரிப்போடு செயல்படுவோம். கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக … Read more