1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..!

இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று வெளியிட்டார். இப்புதிய தொழிற்சாலை மூலம் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ்-ஐ பாதி விலையில் வாங்க முடியும் என்றும், இதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘எண்ணெய்’ என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ.200 கோடி மதிப்பிலான 7 ஸ்டார் ரிசார்ட் இடிப்பா? இன்னொரு நொய்டா … Read more

முகநூல் நட்பு; பெண் குரலில் பேசி மோசடி செய்த ஆண்! – இன்ஜினீயரின் அப்பாவுக்கு நேர்ந்த சோகம்

திருச்சியைச் சேர்ந்தவர் மன்சூர் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 13.9.2022-ம் தேதி கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் என்னுடைய அம்மா, அப்பாவுடன் வசித்து வருகிறேன். தற்போது நான், இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறேன். அதனால், என்னுடைய நண்பர்களுடன் சென்னையில் தங்கியிருக்கிறேன். இந்த நிலையில், என்னுடைய அப்பாவின் முகநூலுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் முகநூல் கணக்கிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதற்கு என்னுடைய … Read more

ரஷ்யா ஒருபக்கம் உக்ரைன் மறுபக்கம்: இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் ஜேர்மனி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது ஜேர்மனி. ஆயுதங்கள் வழங்கவில்லை என உக்ரைனும், ஆயுதங்கள் வழங்குவதால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ரஷ்யாவும் ஜேர்மனி மீது குற்றம் சாட்டிவருகின்றன.  இராணுவ ஹார்ட்வேர் வழங்கக் கோரும் உக்ரைனின் கோரிக்கைகளை ஜேர்மனி அலட்சியப்படுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் ஜேர்மனி மீது தங்கள் கோபத்தைக் காட்டியுள்ளார்கள். இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜேர்மன் அதிகாரிகள் பயந்துபோய் இருக்கிறார்கள், ஏதேதோ … Read more

மருத்துவமனைகளில் பணிபுரியும் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி!

சென்னை; மருத்துவமனைகளில் பணிபுரியும் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. பொதுவாக அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றோர், குறிப்பிட்ட நேரத்தை கடந்து மேலும் சில மணி நேரம் பணியாற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, இவ்வாறு நிர்பந்திக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. 12 மணி நேரத்திற்கு மேல் பணியில் இருக்கும் சூழல் உள்ளது.மேலும், அரசு ஊழியர்களுக்கான விடுமுறை சலுகையும் … Read more

ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானப்படை வீரர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வரும் செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் … Read more

முழு நேர ஊழியர்கள் இது சரிவராது.. மூன் லைட்டிங்-க்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎம்!

சமீபத்திய காலமாகவே மூன்லைட்டிங் என்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஐடி நிறுவனங்கள் பலவும் இது குறித்து தங்கள் கருத்துகளை விவாதித்து வருகின்றன. முன்னதாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், மூன்லைட்டிங் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன. தற்போது சர்வதேச டெக் ஜாம்பவான் ஆன ஐபிஎம் நிறுவனமும் மூன் லைட்டிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. சீனா வேண்டாம்.. இந்தியாவை தேடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் – நிர்மலா சீதாராமன் ஐபிஎம் எச்சரிக்கை … Read more

விழுப்புரம்: “ஆவினுக்கு இயந்திரம் வாங்கியதில் ரூ.26 கோடி இழப்பு!" – செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர்,  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அந்தக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, “இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ததில் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் விடுதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. ஆதிதிராவிடர் துறை செயலாளர் ஜவகரிடம் இது குறித்துப் பேசினேன். ஆனந்த் ஐ.ஏ.எஸ் அவர்களை ஆய்வு செய்ய அனுப்புவதாகச் … Read more

மகாராணியாரின் சவப்பெட்டியின்மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்: மக்களை நெகிழவைத்த ஒரு இயற்கை அதிசயம்

மகாராணியாரின் சவப்பெட்டி, ஸ்காட்லாந்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழ, அது தெய்வீக செயல் என்று கூறி மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்கள். பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. Image: Georgie Gillard / Story Picture Agency மகாராணியாரின் சவப்பெட்டி … Read more

கோயம்பேடு மளிகை பொருள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் மாவட்ட வாரியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோவில் பிரசாத கடை தொடங்கி, உணவகங்கள், சமையல் எண்ணெய் விற்பனை கடைகள் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாரிமுனையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் சில கடைகள் சீல் வைக்கப்பட்டது. இதனைத் … Read more