இந்தியாவில் புதிதாக 6,422 பேருக்கு கோவிட்: 14 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,16,479 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 5,748 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,41,840 ஆனது. தற்போது 46,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 14 பேர் மரணமடைந்ததால், … Read more

ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..!

அமெரிக்கப் பணவீக்க பாதிப்பால் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை சாதகமாக அமைந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் நிஃப்டி குறியீடு 50 புள்ளிகள் வரையில் உயர்ந்து 18,050 புள்ளிகளையும், சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,676.12 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. ஆனால் இந்த உயர்வு அடுத்த சில நிமிடத்தில் சரிவை எட்டியது. சரியாக 10 மணிக்குச் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிவில் 60,288.36 … Read more

“நினைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க முடியும், ஆனால்…" – கலவரம் குறித்து மம்தா

மேற்கு வங்கத்தில் பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்த நேற்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’, அதாவது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிலையில், நபன்னா அபிஜன் பேரணியின் போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்கிறது. இதில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் … Read more

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரைக்கு இன்று ஒருநாள் லீவு…

திருவனந்தபுரம்: பாரத் ஜோடோ பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், சாலைகளும் மோசமாக இருப்பதால், பாதயாத்திரை செல்பவர்கள் கடும் சிரமப்பப்படுவதால், இன்று ஒரு நாள் ஓய்வு அறிக்கப்பட்டு உள்ளது. ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த … Read more

தமிழகத்தில் இன்புளுன்ஸா காய்ச்சலால் 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்புளுன்ஸா காய்ச்சலால் 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இன்புளுன்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் முகக்கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டதால் காய்ச்சல் குறைவாக இருந்தது, படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி  வருவதாக கூறுவது தவறான தகவல் … Read more

மும்பை தாக்குதலின் சூத்திரதாரி பயங்கரவாதி மசூத் அசார் எங்கே? பங்காளிகள் ஆப்கான்-பாக். இடையே மோதல்!

International oi-Mathivanan Maran கராச்சி: ஐநாவால் தேடப்படும் பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான தீவிரவாதி மசூத் அசார் எங்கே என்பதில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன. 1990களில் பாகிஸ்தான் தூண்டுதலால் பல்வேறு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின. அதில் ஒன்றுதான் ஜெய்ஷ் இ முகமது. இதன் தலைவரான மசூத் அசார், 1994-ல் ஜம்மு காஷ்மீரில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மசூத் அசார் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளை … Read more

இரண்டு லட்சம் ரூபாய் பாக்கிக்காக ரூ.1 கோடி காரை எரித்த தொழிலாளி| Dinamalar

நொய்டா : வீட்டில் ‘டைல்ஸ்’ பதித்த வேலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பாக்கியை செலுத்தாததால் தொழிலதிபரின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை எரித்த கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 45ல் வசிக்கும் தொழிலதிபர் ஆயுஷ் சவுகான். இவரது பங்களா மற்றும் அலுவலகங்களுக்கான கட்டட வேலைகளை கடந்த 12 ஆண்டுகளாக ரன்வீர் என்பவர் செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சவுகானின் பங்களாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த ரன்வீர் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த … Read more

க்யூஆர் கோட் மூலம் இதை செய்யாதீர்கள்.. செய்தால் அக்கவுண்ட் காலி.. எஸ்பிஐ எச்சரிக்கை

இந்தியா தற்போது டிஜிட்டல்மயமாகி நிலையில் பலர் டிஜிட்டல் முறையில் தான் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்யும் வகைகளில் க்யூஆர் கோட் பயன்படுத்துவது ஒன்று என்பதும் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க்யூஆர் கோட்-ஐ பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தி கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் பணம் பெறுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

`கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா; எழுந்து வா எம் அண்ணா!'

சிங்க நடையும், சிங்காரத் தென்றல் நடையும் – பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும் ஒரு சேரத் தன் உரை நடையால் கண்ட பூமான், தம்பிமார் மீது விழியோட்டி வெற்றி கொள்ளும் கோமான். பூமிப் பந்தில் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ – அங்கெல்லாம் அவர்களது இதயத்தில் தங்கச் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன் சிந்தை, அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கச் செய்யும் வகையில் நம்மையெல்லாம் ‘தம்பீ ‘ என்று அழைத்திட்ட அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை … Read more

சட்டம் தன் கடமையை செய்யும்- மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சட்டம் தன் கடமையை செய்யும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி ஒன்றை அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினர் பலர் கலந்து கொண்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் தடுப்புகளை மீறி பாஜகவினர் பேரணியை … Read more