ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒபிஎஸ்-க்கு  வழங்கப்பட்ட பாதுகாப்பை மறுஆய்வு செய்யகோரியதையும் நிராகரித்து ஆதிராஜாராம் மனுவை தள்ளுபடி செய்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

துப்பாக்கிச் சூடு விவகாரம் 7 போலீசார் சஸ்பெண்ட்| Dinamalar

பாட்னா : பீஹாரில் நேற்று முன் தினம் மர்ம நபர்கள் இருவர் பொதுமக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்; 11 பேர் காயமடைந்தனர். இதில் கடமை தவறியதாக கூறி ஏழு போலீசார் நேற்று ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பெகுசராய் நகரில் மர்ம நபர்கள் இருவர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். … Read more

11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த WPI பணவீக்கம்.. ஆனாலும் பிரச்சனை தான்!

டெல்லி: மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்து, 12.41% ஆக குறைந்துள்ளது. இது 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இந்த மொத்த விலை பணவீக்கமானது கடந்த ஜூலை மாதத்தில் 13.93% ஆக இருந்தது. இதே கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக 15.88% ஆக உச்சம் எட்டியிருந்தது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் 11.64% என்ற இரட்டை இலக்கினை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. … Read more

சிறுவயது முதலே நட்பு; பிணமாக மீட்கப்பட்ட மாணவி; ஒருமணிநேரத்தில் தோழியும் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரே குடியிருப்பில் வணிகவியல் படிக்கும் மாணவியும், அனிமேஷன் படிக்கும் மாணவியும் வசித்து வந்தனர். 19 வயதுடைய இரண்டு பெண்களும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகளாக பழகி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை வணிகவியல் படிக்கும் மாணவி அவரின் வீட்டின் அறையில் பிணமாக மீட்கப்பட்டார். ஆவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியாத நிலையில், காவல்நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தற்கொலை சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை … Read more

ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் புன்னகை சிந்திய மேகன்! சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்

ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் மேகன் புன்னகைத்தது போன்ற முகபாவனையை வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு. மகாராணி எலிசபெத்தை அவமரியாதை செய்யும் செயல் என விமர்சனம். பிரித்தானிய மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் மேகன் புன்னகைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பலரும் ராணியை அவமரியாதை படுத்தும் செயல் இது என மேகனை விமர்சித்துள்ளனர். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் … Read more

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் காய்ச்சல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விஷக்காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரணியன், மிழ்நாட்டில் இன்புளுயன்சா, டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், 282 குழந்தைகள்  இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.  சென்னை … Read more

விருதுநகரில் ரூ.70.57 கோடியில் ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விருதுநகர்: விருதுநகரில் ரூ.70.57 கோடியில் 2.02 லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் 6 தளங்களுடன் கட்டப்பட உள்ளது.  

மாட்டிறைச்சியை தவிர்க்க ஆர்.எஸ்.எஸ்., வேண்டுகோள்| Dinamalar

புதுடில்லி : “அசைவ உணவு சாப்பிடுவதை தடை செய்ய முடியாது. ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”என ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறியதாவது:அசைவ உணவு சாப்பிட தடை விதிக்க முடியாது. அது மக்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு தீமை விளைவிக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் … Read more

அதானியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. அதானியா அம்பானியா?

இந்தியாவின் இரு பெரும் வணிகர்களான அதானியும், அம்பானியும் போட்டி போட்டுக் கொண்டு வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றனர். முதலீடுகளை அடுத்தடுத்து அதிகரித்து வருகின்றனர். புது புது துறையாக காலடி எடுத்து வைத்து வருகின்றனர். மொத்தத்தில் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தங்களது முதலீடுகளை விரிவாக்கம் செய்து வருகின்றனர். அதானி வில்மர் ஏற்கனவே சமயலறை பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக உள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தனது சில்லறை வணிகத்தினை பெரியளவில் விரிவாக்கம் செய்து … Read more

காலை உணவுத் திட்டம்: “இது செலவு அல்ல; நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன்" – முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை நெல்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலில் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர். விழாவில் பின்பு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய … Read more