இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 23 முதல் 28 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை செல்கிறார். ஈச்சனாரியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் கோபிசெட்டிபாளையம் கள்ளப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் பங்கேற்கிறார். இதையடுத்து வரும் 26-ஆம் தேதி கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி 75ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

ஆக-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…பயணிகள் குழப்பம்

 அக்டோபர் 29 திகதி வரை 600க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து. மார்ச் இறுதி வரை குளிர்கால அட்டவணையில் 10,000 விமானங்களை பாதிக்கும்  பிரித்தானிய ஏர்வேஸ் அக்டோபர் இறுதி வரை அதன் குளிர்கால அட்டவணையில் இருந்து ஆயிரக்கணக்கான விமானங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விமான ரத்துகளை தொடர ஹீத்ரோ முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 29 திகதி வரை 600க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் … Read more

புதுச்சேரி, காரைக்காலில் வன அறிவியல் மையம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ‘வன அறிவியல் மையங்கள்’ அமைக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது;மாநிலத்தில், விளை நிலங்களில் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக இத்துறைக்கு இந்த நிதியாண்டிற்கு ரூ.137.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பொது மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க, ‘என் வீடு என் நிலம்’ திட்டத்தின் கீழ் ரூ.5,000 மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள், நிழல் வலை கொண்ட தொகுப்பு, … Read more

சித்தராமையாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு – கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த வாரம் குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வீரசாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்தை கண்டித்து பா.ஜனதாவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்று இருந்த ஒருவர் சித்தராமையாவின் கார் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இந்த … Read more

என்னாது கார் எரிபொருளுக்கு மட்டும் இவ்வளவு செலவா.. புதுச்சேரி அமைச்சர்களின் செலவால் அதிர்ச்சி?

புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10 நாட்கள் கூடிய நிலையில், அமைச்சர்கள் 3.3 கோடி ரூபாய்க்கு வாங்கிய புதிய வாகனங்களின் எரிபொருள் செலவு மட்டும், 70 லட்சம் ரூபாய் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எரிபொருள் செலவினங்கள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு மனு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்! ஆர்டிஐ மூலம் தகவல் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் … Read more

தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில்…அணுஆயுத ஆபத்து: ஐ.நா பொதுசெயலாளர் வருத்தம்

உலக பதற்றத்தை தணிக்க நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது, ஐ.நா பொதுசெயலாளர் கருத்து  உலகில் அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில் உள்ளது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்களன்று தெரிவித்துள்ளார். உலகில் தற்போது உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், சீனா தைவான் இடையிலான பதற்றம், அமெரிக்கா ஈரான் இடையிலான அணுஆயுத ஒப்பந்தம் என அடுத்தடுத்த பிரச்சனைகள் … Read more

எருமை மாடுகள் மீது ஆசிட் ஊற்றி கொடுமை| Dinamalar

இந்திய நிகழ்வுகள் ஆசிரியரை ‘வெளுத்த’ கூடுதல் கலெக்டர்: பீஹாரில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி பாட்னா-பீஹாரில், ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்காமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், தேசியக்கொடியுடன் சாலையில் படுத்து போராடியவரை, கூடுதல் கலெக்டர் தடியால் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன … Read more

டெல்லியில் பழங்குடியினர் கலைக் கண்காட்சி இன்று தொடங்கியது

புதுடெல்லி: புதுடெல்லியில் ஒடிசா லலித் கலா அகாடமியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் ஐந்து நாள் பழங்குடியினர் கலைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினரின் செழுமையான அழகியல் உணர்வை மக்களுக்கு வழங்குகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதுசூதன் பதி தொடங்கி வைத்தார். இந்த வெளியீட்டு விழாவில் ஒடிசா லலித் கலா அகாடமியின் தலைவரான பிரபல மணல் கலைஞர் … Read more