IKEA நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு இனி கொண்டாட்டம்!

ஸ்வீடன் நாட்டின் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமான IKEA ஏற்கனவே இந்தியாவில் ஐந்து இடங்களில் கடைகளை திறந்து உள்ள நிலையில் தற்போது சிறிய நகரங்களிலும் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தனது சில்லறை விற்பனைக் கடையை திறந்து மக்களின் பேராதரவை IKEA பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது மற்றும் சிறிய நகரங்களிலும் கடையை திறப்பது போன்ற திட்டத்தை … Read more

`அதிவேக பயணம்… ஃபைன் கட்டுங்க’ ; பார்க்கிங்கில் நின்ற காருக்கு வந்த நோட்டீஸ் – திகைத்த உரிமையாளர்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துதல் போன்ற காரணங்களுக்காக பலரும் போலீஸில் சிக்கி அபராதம் செலுத்தியிருப்பர். ஆனால் இதுவே நீங்கள், உங்கள் காரை முறையாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பவந்து பார்க்கும்போது, `48 கி.மீ வேகத்துல செல்லக்கூடிய சாலையில், உங்க கார் 88 கி.மீ வேகத்துல போயிருக்கு, அபராதம் காட்டுங்க-னு’ உங்களுக்கு கடிதம் வந்தா எப்படியிருக்கும். அப்படி ஒரு … Read more

போக்குவரத்து பாலத்தை தகர்த்த உக்ரைன்…உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என ரஷ்யா குற்றச்சாட்டு

ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு. பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஷெல் செய்வதில் ரஷ்ய துருப்புக்கள் பங்கேற்கவில்லை என  மிஜின்ட்சேவ் தகவல். கசென்னி டோரெட்ஸ் ஆற்றின் குறுக்கே ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில், உக்ரைனிய படைகள் தடுப்பு தாக்குதல் மட்டுமே நடத்திய நிலையில், தற்போது ரஷ்ய இலக்குகள் மீது … Read more

ஆகஸ்ட் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 94-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 94-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,473,292 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,473,292 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 601,337,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 575,885,507 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,883 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினம் ரூ.500 சம்பாதிக்கும் தினக்கூலிக்கு ரூ.37.5 லட்சம் வரிபாக்கி… வருமான வரித்துறை நோட்டீஸ்

தினந்தோறும் 500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் தினக்கூலி ஒருவருக்கு 37.5 லட்ச ரூபாய் வருமான வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசை அந்த தினக்கூலி நபர் காவல்துறையில் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை பல திடுக்கிடும் தகவல்களை கண்டுபிடித்து உள்ளது. 2 மாதங்களில் 28,000 கிமீ பயணம்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-ஆல் ஏற்பட்ட பிரச்சனை! தினம் ரூ.500 வருமானம் பீகார் மாநிலத்தின் ககாரியா என்ற … Read more

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 23 முதல் 28 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை செல்கிறார். ஈச்சனாரியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் கோபிசெட்டிபாளையம் கள்ளப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் பங்கேற்கிறார். இதையடுத்து வரும் 26-ஆம் தேதி கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி 75ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

ஆக-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…பயணிகள் குழப்பம்

 அக்டோபர் 29 திகதி வரை 600க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து. மார்ச் இறுதி வரை குளிர்கால அட்டவணையில் 10,000 விமானங்களை பாதிக்கும்  பிரித்தானிய ஏர்வேஸ் அக்டோபர் இறுதி வரை அதன் குளிர்கால அட்டவணையில் இருந்து ஆயிரக்கணக்கான விமானங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விமான ரத்துகளை தொடர ஹீத்ரோ முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 29 திகதி வரை 600க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் … Read more