விருதுநகரில் 6தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு அளித்திருந்த திருமதி மு.பாண்டிதேவிக்கு, அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கன்வாடி பணியாளர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவையும் வழங்கினார். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம், இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

போ.. ஒட்டகம் மேய்! குவைத்தில் தமிழரை சுட்ட முதலாளி.. பிரேத பரிசோதனையில் காத்திருந்த \"அந்த\" அதிர்ச்சி

International oi-Shyamsundar I குவைத்: குவைத்தில் தமிழர் முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடல் நாளைக்கு அவரின் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார். குடும்ப கஷ்டம் காரணமாக, வெளிநாடு வேலைக்கு சென்றால் எல்லா கஷ்டமும் தீர்ந்துவிடும், கடனை எல்லாம் அடைத்து … Read more

பாக்.,குக்கு ராணுவ உதவி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு| Dinamalar

புதுடில்லி : நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எப் – 16 ரக போர் விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது. இதற்கு தேவையான மென்பொருள் உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா சமீபத்தில் முன் வந்தது. இதற்கு மத்திய அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந் நிலையில் அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் … Read more

பெங்களூரு ஆக்கிரமிப்பு.. பட்டியலில் விப்ரோவும்.. இதென்ன புது ட்விஸ்டா இருக்கு?

பெங்களூரு: பெங்களூரில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஸ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கட்டிடங்களை கட்டியுள்ளதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நோட்டீஸ் ஆனது கடந்த வாரம் முழுக்க வெள்ளத்தால் நிரம்பி வழிந்த சிலிக்கான் வேலி ஸ்தம்பித்து போன்ற நிலையில் வந்துள்ளது. இது குறித்து அப்போது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம். தண்ணீர் செல்லும் பாதைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன. தண்ணீர் … Read more

சீல் வைக்கப்படும் ராணி எலிசபெத்தின் உயில்; 90 ஆண்டுகளுக்கு யாரும் படிக்க முடியாது! – என்ன காரணம்?

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார். இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, புதிய மன்னராக 73 வயதான சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ராணியின் மறைவுக்குப் பிறகு அவர் குறித்துப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசு குடும்ப நடைமுறைப்படி, இரண்டாம் எலிசபெத் ராணியின் உயில் லண்டனில் குறைந்தது 90 … Read more

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நிர்வாகிகளுக்கு ‘கியூஆர் கோடு’டன் கூடிய அடையாள அட்டை…!

டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நிர்வாகிகளுக்கு ‘கியூஆர் கோடு’டன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்ல இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளாக தேந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லாமல், இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகிது முதல் தற்போதுவரை கட்சியின்  இடைக்கால தலைவராக சோனியாகாந்தி தொடர்ந்து … Read more

எட்டயபுரம், கழுகுமலை அருகே பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து 28 ஆடுகள் பலி

எட்டயபுரம்: கோவில்பட்டி ராஜிவ் நகரை சேர்ந்தவர் சங்கர்ராஜா (40). இவர், எட்டயபுரம் அருகேயுள்ள குளத்துள்வாய்பட்டியில் உள்ள தோட்டத்தில் செட் அமைத்து 40 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றுவந்த ஆடுகளை தொழுவத்தில் அடைத்துவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு 15க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கம்பிவலை வழியாக உள்ளே சென்று ஆடுகளை கடித்து குதறின. இதில் 8 ஆடுகள் தொழுவத்திற்குள்ளே இறந்து கிடந்தன. 3 ஆடுகளை வெளியில் இழுத்து சென்று காட்டுப்பகுதியில் … Read more

இந்தியாவின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்.. கவலை அளிக்கும் கணிப்பு..!

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் குறையும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. இது முன்னதாக 7.8% ஆக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 7% ஆக குறைத்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் இன்னும் குறைந்து 6.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துளது. இந்த விகிதமானது முன்னதாக 7.4% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Comments Get Latest News alerts. Allow Notifications You have already subscribed … Read more

2018-ல் குழந்தைகளைக் கொன்ற தாய்; 2022-ல் சூட்கேஸில் உடல்கள் கண்டெடுப்பு! – நடந்தது என்ன?

நியூசிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஏலத்தில் ஒரு குடும்பம் கலந்துகொண்டது. அந்த ஏலம் `ஸ்டோரேஜ் யூனிட்’ என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்ட குடும்பம் பழைய சூட்கேஸ் ஒன்றை ஏலத்தில் சொந்தமாக்கியிருக்கிறது. மேலும், பழைய சூட்கேஸ் என்பதால் வித்தியாசமான பொருள்கள் இருக்கும் என எதிர்பார்த்தபடி அந்த சூட்கேஸை திறந்ததும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அந்த பழைய சூட்கேஸ் முழுவதும் மனித உடல்களின் பாகங்கள் இருந்திருக்கின்றன. அதைக் கண்டு அதிர்ந்துபோன அந்தக் குடும்பம், உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் … Read more