இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (ஆக.,21) 11,539 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, நேற்று 9,531 ஆக பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து 8,586 ஆக பதிவானது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,586 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,43,57,546 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 9,680 பேர் நலமடைந்து … Read more

1 மாத சரிவுக்கு பிறகு தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. வாங்க ரெடியா இருங்க?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், கடந்த ஆறு அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது. எனினும் இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. டாலரில் சற்று தளர்வுகள் இருந்தாலும், இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகித அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணமல் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. அதோடு தங்கம் விலையும் ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்ட நிலையில், அது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகத் … Read more

சேலம்: ஆம்னி பஸ் – கார் மோதி விபத்து; 6 பேர் பலி… துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

சேலம் ஆத்தூர், துலுக்கனூர் கிராமம் அருகே நேற்று நள்ளிரவு 1.00 மணி அளவில் முல்லைவாடி பகுதியிலிருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த ஆத்தூர் நகர காவல் நிலைய போலீஸார், `விபத்தில் உயிரிழந்தவர்கள், ஆத்தூர் … Read more

ஜிம்பாப்வே அணியை கிழித்து தொங்கவிட்ட இந்தியா! குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீரர்கள் வீடியோ

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய இந்திய வீரர்கள். இந்திய அணி வீரர்கள் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் நடனமாடி கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே-க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் … Read more

பத்ம விருது பெற்ற ஆம்பூர் பரிதா தோல் தொழிற்சாலை உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

ஆம்பூர்:  ஆம்பூர் பரிதா தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகள  உள்பட அவர்களுக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில்  வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலை பத்ம விருது பெற்ற தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபரிதா தோல் நிறுவனத்தை மெக்கா இர்சாத் அகமது, மெக்கா ரபீக் அகமது, இஸ்ரார் அகமது ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 13 தோல் தொழிற்சாலைகள் உள்ளன.  … Read more

ஈரோடு திருநகர் காலனியில் உள்ள அரசு பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் ஏ.சி. வெடித்ததால் பரபரப்பு..!

ஈரோடு : ஈரோடு திருநகர் காலனியில் உள்ள அரசு பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் ஏ.சி. வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்க ஏ.சி.யை ஆன் செய்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. ஏ.சி.வெடித்து அறையில் தீப்பற்றியதால் கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். 

வேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்; இதனை ராகுல் நிராகரித்தால் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை; அகில இந்திய தலைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது கலகக் குரல் எழுப்பிய ஜி 23 தலைவர்களின் கோரிக்கை. இதனை காங்கிரஸ் மேலிடம் முதலில் நிராகரித்து கொண்டே வந்தது. கடந்த ஆண்டு … Read more

விப்ரோ-வை தொடர்ந்து இன்போசிஸ்.. கடுப்பில் ஐடி ஊழியர்கள்..!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், ஜூன் காலாண்டுக்கான ஊழியர்களின் சராசரி வேரியபிள் பே ஊதியத்தை 70 சதவீதமாகக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் 10 லட்சம் 20 லட்சம் எனப் பெரிய தொகையைச் சம்பளமாகக் கொடுத்தாலும் இதில் பெரும் தொகையை வேரியபிள் பே- ஆகக் கொடுக்கிறது. வேரியபிள் பே பிரிவில் இருக்கும் 2 லட்சமோ அல்லது 4 லட்சமோ அதை 4 காலாண்டுகளுக்கு ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படும். இந்தத் தொகையைத் … Read more

Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்காத உடல்… பிரச்னை தீருமா, தொடர்கதையாகுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் திருமணமானது. முதல் நாளிலிருந்தே என் உடல் தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. பதற்றம், பயம் காரணமாக அப்படியிருக்கலாம் என ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருக்கிறேன். இதை வெளியிலும் சொல்ல முடியவில்லை. கணவர் அனுசரணையோடு இருப்பதால் பிரச்னை இல்லை என்றாலும் இது தொடர்கதையாகுமோ என பயமாக இருக்கிறது. எனக்கு என்ன பிரச்னையாக இருக்கும்…. தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மகப்பேறு மருத்துவர் நித்யா … Read more

இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு துணை தேர்வு ரிசல்ட்

சென்னை: பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது. இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள்,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு வெளியாக உள்ளது என்றும், மறுகூட்டலுக்கு, வரும் 25, 26ம் தேதிகளில், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.