ஜூலை-11: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த  50-வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகன் கைது..!

பரான், ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹயலால் (வயது 70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (வயது 35) தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்ததும், சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவப்பெயர் … Read more

மூன்றாவது டி20 போட்டி..இங்கிலாந்து அணி திரில் வெற்றி: கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில், இன்று டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் மைதானத்தில் வைத்து மூன்றாவது டி-20 போட்டிகள் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,372,908 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,372,908 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 560,588,991 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 533,558,340 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,814 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வங்கி அதிகாரி அடித்து கொலை அவசர புத்தி செக்யூரிட்டி கைது| Dinamalar

எச்.ஏ.எல். : திருடன் என தவறாக நினைத்து, வங்கி அதிகாரியை இரும்புத்தடியால் அடித்து கொலை செய்த, செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அபினாஷ், 24, அங்குள்ள வங்கி கிளையொன்றில், மேலாளராக பணியாற்றினார். பயிற்சிக்காக பெங்களூரு வந்திருந்தார். முனேனகொப்பலுவில், தன் அண்ணனின் நண்பர்கள் இருந்த அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், இரவு பார்ட்டிக்கு சென்ற இவர், ஜூன் 5 அதிகாலை 3:00 மணியளவில், குடிபோதையில் அறைக்கு புறப்பட்டார். ஆனால், அவருக்கு வழி தெரியவில்லை. வழி தவறி எச்.ஏ.எல்.,லின், ஆனந்த … Read more

இலங்கை ஜனாதிபதியிடம் போராட்டக்காரர்கள் கிண்டலாக மூன்வைத்த கேள்வி? வைரலான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்

இலங்கை ஜனாபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவரது வீட்டில் சின்ன பின் மொபைல் சார்ஜர் இல்லையா? என அவரது இணைய பக்கம் மூலமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவ்வாறு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம், ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முழுவதுமாக கைப்பற்றும் அளவிற்கு பூதாகரமாக வெடித்தது. … Read more

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் மீண்டும் குளறுபடி 14 மணி நேரம் பரிதவித்த மங்களூரு பயணியர்| Dinamalar

மங்களூரு : துபாயிலிருந்து 189 பயணியருடன் புறப்பட்ட ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மங்களூருக்கு பதிலாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு விமானியின் பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி, அவர் விமானத்தை இயக்க மறுத்து விட்டார். இதனால், மறுநாள் காலை ௧௦:௦௦ மணி வரை, 14 மணி நேரம் பயணியர் பரிதவித்தனர்.துபாயிலிருந்து ஜூலை 8ம் தேதி, ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவன விமானம், 189 பயணியருடன் மாலை 5:00 மணிக்கு … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் தேர்தல் இலாகாக்கள் ஒதுக்கி கண்காணிப்பு| Dinamalar

சாம்ராஜ் நகர் : சரியான தலைவரை தேர்ந்தெடுக்கும் அறிவை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில், ‘மாணவர் தேர்தல்’ நடத்தப்பட்டு வருகிறது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் சோமள்ளி கிராமத்தில் ஸ்ரீகங்காதரேஸ்வரா அரசு முதன்மை தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவர் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.தற்போது நடக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல் போன்றே, ஓட்டு சீட்டு நடைமுறை, விரலில் … Read more

ராஜபக்ச கேட்டுக் கொண்டால்…இந்திய ராணுவம் களமிறங்கும்: பிரபல தலைவர் கருத்து!

இலங்கையின் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் நாங்கள்(இந்தியா) கொடுக்க வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய மக்கள் … Read more