சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைப்பு
சென்னை: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகக் குழு என்ற பெயரில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.