பிரிட்டனை முந்தி 5வது இடத்தை பிடித்தது இந்தியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுவரை அந்த இடத்தில் இருந்த பிரிட்டன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்எப் அமைப்பானது, வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சி கணக்கில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனியை தொடர்ந்து இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. … Read more

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….

சென்னை: நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். செப்டம்பர் 7ந்தேதி மாலை அவரது யாத்திரை தொடக்க விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, குமரியில் அவர் மேற்கொள்ளும் 7நாள் பாத யாத்திரை தொடர்பான பயணத்திட்டம், அதற்கான பொறுப்பாளர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரியில்  7ந்தேதி மாலை … Read more

சென்னையில் தொழிலதிபரை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: சென்னையில் தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரனை கொலை செய்து பாலித்தீன் கவரில் கட்டி சின்மயாநகர் அருகே கால்வாயில் வீசியுள்ளனர்.

பொய் செய்திகள் பரப்பும் வழக்குகளில் மேற்கு வங்கம்தான் முதலிடம்.. வெளியான டேட்டா

India oi-Halley Karthik கொல்கத்தா: சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தில்தான் அதிகம் வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக பொய் செய்திகள் குறித்து 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொய் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

டீன் ஏஜ், பள்ளி நாள்களில் வர்ற இனக்கவர்ச்சி… காதலா, காமமா? #VisualStory

Happy Hormone ஹார்மோன்கள் சுரந்து, உடலை இனப்பெருக்கத்துக்குப் பக்குவப்படுத்துற வயசு டீன் ஏஜ். ஹார்மோன்கள் சுரப்பினால பிள்ளைங்க உடம்புக்குள்ளேயும், வெளியேயும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். டீன் ஏஜ், அவங்க உடம்புல நிறைய அழகியல் மேஜிக்ஸ் செய்யும். அந்த ஏஜ்ல உலகமே நம்மளை வியந்து பார்க்குதுன்னு நினைச்சுப்பாங்க. டிரஸ்ஸிங், பேச்சுன்னு எதிர்பாலினரை ஈர்க்கிறதுக்கு நிறைய மெனக்கெடுவாங்க. இந்த இனக்கவர்ச்சியை பின்னாடி இருந்து இயக்குறது காமம்தான். டீன் ஏஜ்க்கே உரிய இனக்கவர்ச்சியில தடுமாறிட்டு இருக்கிறப்போ, அவங்க குடும்பம் `இந்த வயசுல … Read more

ஆட்டுக்கு ‘பை பை’ : டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற செரினா வில்லியம்ஸ்-க்கு ட்விட்டரில் குவிந்த வாழ்த்து

27 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் டென்னிஸ் உலகில் கோலோச்சி வருபவர் 40 வயதான செரினா வில்லியம்ஸ். வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான செரினா தற்போது நடைபெற்று வரும் யூ.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். Serena, THANK YOU. It is because of you I believe in this dream. The impact you’ve had on me goes beyond any words that … Read more

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் சிக்கியது. 57 பயணிகளிடம் நடத்திய சோதனையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டிசிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. முதல் வருட சம்பள உயர்வு கட்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அடுத்தது முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே முதல் நிறுவனமாகக் கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்த நிலையில், தற்போது முதல் நிறுவனமாக அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் எனக் கட்டுப்பாட்டை முன் வைத்துள்ளது. இந்த நிலையில் பிர முன்னணி ஐடி நிறுவனங்களுடன் சேர்ந்து moonlighting கொள்கையை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் தற்போது தனது ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பள உயர்வு … Read more

டெல்லிக்கு இடமாறும் அதிமுக சண்டை… பொதுக்குழு விவகாரத்தில் இனி அடுத்து என்ன?!

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பொதுக்குழு தீர்மானம் மூலமாக நீக்கப்பட்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் பன்னீர்செல்வம். அவரின் ஆதரவாளரான வைரமுத்து சார்பிலும் தனியே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு … Read more