டெல்லிக்கு இடமாறும் அதிமுக சண்டை… பொதுக்குழு விவகாரத்தில் இனி அடுத்து என்ன?!
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பொதுக்குழு தீர்மானம் மூலமாக நீக்கப்பட்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் பன்னீர்செல்வம். அவரின் ஆதரவாளரான வைரமுத்து சார்பிலும் தனியே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு … Read more