டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சாலை விபத்தில் பரிதாப பலி| Dinamalar

மும்பை : மிகப் பெரும் தொழில் குழுமமான, ‘டாடா சன்ஸ்’ தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, 54, மஹாராஷ்டிராவில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.’ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்’ என்ற மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைவரான, மறைந்த பலோன்ஜி மிஸ்த்ரியின் இளைய மகன் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குனர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார் சைரஸ் மிஸ்திரி. கடந்த 2012ல் அதன் தலைவராக … Read more

உபர் கூடுதல் கட்டணம் வசூலித்ததா? எப்படி அதனைத் திரும்பப் பெறுவது தெரியுமா?

ஊபர் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் நகரங்கள் மட்டுமல்லாமல் மாநிலம் – மாநிலம் இடையிலான டாக்ஸி சேவையையும் வழங்கி வருகிறது. அண்மையில் ஓட்டுநர்கள் டாக்ஸி புக்கிங்கை ஏற்றுக்கொண்டு பிறகு அதனை ரத்து செய்வதைத் தடுக்க, ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எங்கு பயணியை டிராப் செய்ய வேண்டும் என்ற விவரங்களைக் காட்டத் தொடங்கியது. இருந்தாலும் ஊபரில் ஒரு புகார் தொடர்ந்து நிவர்த்தி செய்யப்படாமலே உள்ளது. ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை! என்ன புகார்? ஊபரில் … Read more

அதி தீவிர `வீகன்' உணவு, இறந்துபோன குழந்தை, தாய்க்கு ஆயுள்தண்டனை: நடந்தது என்ன?

அசைவ உணவுகளை தவிர்த்து, விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்த்து, மேலும் பால் மற்றும் `டயரி’ பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்கும் சைவ உணவுமுறையே ‘வீகன்’ உணவுமுறை. `வீகனிசம்’ என்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பவர்கள் `வீகன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஷீலா ஓ லியரி Doctor Vikatan: எரிச்சல், மன அழுத்தம், தலைகீழாக மாறிப்போன தாம்பத்திய ஆர்வம் – தீர்வுகள் என்ன? இதை அதி … Read more

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜே.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க ஓதுக்கீடு பெற்றார். முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு பெற்றதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். … Read more

சென்னையில் தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு: ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.

கண்ணில் தென்பட்டவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய 2 பேர்.. 10 பேர் உயிரிழப்பு.. கனடாவில் பயங்கரம்

International oi-Mani Singh S ஒட்டாவா: வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் கண்ணில் தென்பட்டவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய 2 நபர்களால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பெரிய அளவில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சரமாரியாக கண்ணில் தென்பட்டவர்களை இரண்டு நபர்கள் கத்தியால் குத்தியதாகவும் இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் … Read more

“மத்திய நிதி அமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" – கே.எஸ்.அழகிரி ஆவேசம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் ‘பாரத் ஜோடோ யாத்திரா’ என்ற பெயரில் 150 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் இருந்து வரும் 7-ம் தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார். ராகுல் காந்தி நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக்கூட்டம் … Read more

செப்டம்பர் 5: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 107-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முதல்வர் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ., – மேயர் திருமணம்

திருவனந்தபுரம் : கேரளாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கும், திருவனந்தபுரம் மேயருக்கும் நேற்று திருமணம் நடந்தது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, பாலுச்சேரி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வாக சச்சின் தேவ், 28, பதவி வகிக்கிறார். இவர், மாநிலத்தின் இளம் வயது எம்.எல்.ஏ., என்ற பெருமைக்குரியவர். திருவனந்தபுரம் மேயராக, அதே கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன், 22, பதவி வகிக்கிறார். கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த போதே மாநகராட்சி … Read more

“என்.எல்.சி இனி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை” – ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

“கடலூர் மாவட்டத்தையும், அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தி நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.கவின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், “என்.எல்.சி நிறுவனம் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டால் அதனால் ஏற்படும் வளர்ச்சி அப்பகுதி மக்களுக்கு பயன்பட வேண்டும். ஆனால் சுமார் … Read more