“ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக இருக்கிறது!'' – பிரதமர் மோடி

ரஷ்யாவில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்ற அமர்வின் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க 2015-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பொருளாதார மன்றம், ரஷ்ய தூரகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச முதன்மை தளமாக மாறியிருக்கிறது. ஆர்க்டிக் விவகாரங்களில் (arctic subjects) ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் முழு உலகிலும் தாக்கத்தை உருவாக்குகின்றன. … Read more

அண்ணா பிறந்தநாளன்று பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதுரையில்  தொடங்கி வைக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான திமுக  அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு … Read more

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் (79) நீரிழிவு நோயால் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு; சிறப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..!

இந்திய ஐடி துறை அதிக அட்ரிஷன் விகிதங்கள் மற்றும் மார்ஜின் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்துறையின் பல தலைவர்கள் பிரஷ்ஷர்களின் சம்பள அளவுகள் குறித்துப் பேசி வருகின்றனர். இந்தியாவில் சராசரியாக ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும் ஐடி துறையில் தற்போது வர்த்தக மந்த நிலை நிலவும் காரணமாக ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கத் துவங்கியுள்ளது. இதேவேளையில் பல வருடங்களாக ஐடி துறையில் பிரஷ்ஷர்களின் சம்பளம் உயராமல் இருப்பது … Read more

நீலகிரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்; கோயில்களில் சிறப்பு வழிபாடு!

மலையாள மொழி பேசும் மக்கள் நீலகிரியில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முக்கிய திருவிழாவான ஓணத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நீலகிரியில் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமரிசையாக ஓணம் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு நீலகிரியில் ஓணம் திருவிழா களைகட்டியிருக்கிறது. ஓணம் கொண்டாட்டம் வீடுகளில் பூக்கோலமிட்டு அலங்கரித்தும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்தும் இறைவனை வணங்கி வருகின்றனர். பூக்கள், பழம் காய்கறி போன்றவற்றை வாங்கும் மக்களால் சந்தைகள் நிரம்பி … Read more

செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் பொதுவிநியோகத் திட்ட (ரேசன் கார்டு) மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

சென்னை: செப்டம்பர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம்  (ரேசன் கார்ட) சென்னையில் வரும் 10-ம் தேதி நடைபெறும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல்  பிற்பகல் 1மணி வரை நடத்த உள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் … Read more

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (08-09-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு, நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப். 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை.. மாப்பிள்ளை குடும்பம் செய்த அநாகரீகம்..கொந்தளித்த வானதி சீனிவாசன்

India oi-Yogeshwaran Moorthi பில்வாரா: கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த மணமகளிடம் ரூ.10 லட்ச ரூபாய் அபராதம் கேட்டதற்கு, பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் 24 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மே 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் வழக்கப்படி திருமணமான பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை எடுப்பது வழக்கமான ஒன்றாகும். இதனால் திருமணத்திற்கு பின் அவர்களின் குக்டி மரபின்படி, அப்பெண்ணுக்குக் … Read more

மீண்டும் சரிவு பாதையில் கிரிப்டோகரன்சி.. பிட்காயின் விலை என்ன தெரியுமா..?!

கிரிப்டோகரன்சி சந்தையில் கடந்த 24 மணிநேரத்தில் Bitcoin (BTC) மற்றும் Ethereum (ETH) உட்படப் பலவற்றின் விலை குறைந்துள்ளன. காயின்மார்கெட்கேப் படி உலகளாவிய கிரிப்டோ சந்தை மூலதனம் 6.07 சதவீதம் சரிந்து 938.8 பில்லியன் டாலராக உள்ளது, மேலும் மொத்த கிரிப்டோ சந்தை அளவு கடந்த 24 மணி நேரத்தில் 15.20 சதவீதம் அதிகரித்து 82.7 பில்லியன் டாலராக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் அடைந்த கிரிப்டோகரன்னி ஹீலியம். ஹீலியம் விலை தற்போது 4.08 டாலராக … Read more

கதவு, தடுப்புகள் இல்லை; அருகருகே இரண்டு கழிப்பிடங்கள்! – முகம் சுளிக்க வைக்கும் கோவை பொது கழிப்பறை

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில், அருகருகே இரண்டு கழிப்பிடங்கள் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட அந்த பொதுக்கழிப்பிடத்தில் கதவோ, தடுப்பு சுவரோ எதுவும் இல்லாமல் இரண்டு கழிப்பிடங்கள் அருகில் இடம் பெற்றிருந்தன. கோவை வைரல் கழிப்பறை `பதிவு எண் இல்லாத இன்னோவா கார்’ – கோவை மேயர் விளக்கம் அதே பொதுகழிப்பிடத்தில் அருகில் உள்ள கழிப்பறையில் கதவு வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. “இது … Read more