மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக தொடக்கம்

மதுரை இந்து முன்னனி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு இப்போது விமரிசையாக தொடங்கி உள்ளது. தற்போது இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் துவக்கமாக கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது.  இந்த மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் … Read more

முருக பெருமான் முதல்வர் பக்கம் உள்ளார் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை தமிழக அமைச்சர் சேகராபு முருகப்பெருமான் முதல்வர் பக்கம் உள்ளதாக கூறியுள்ளார். இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம். “தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் அனைத்துலக முத்தமிழ் முருகன் பக்தர் மாநாடு … Read more

Wole Soyinka: நைஜீரிய விசிறியின் காற்று… வோலே சோயின்கா | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 16

நிலா காய்ந்துகொண்டிருந்த வசந்தகால இரவொன்றில் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வரிசையாகக் கப்பல்கள் சமுத்திரத்தில் தொலைவில் மிதந்துக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்த்தபடியே, முட்டை வடிவ பாறையொன்றில் வானத்தை அண்ணாந்துப் பார்த்தபடி படுத்திருந்தேன். இடதுபுற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சிகளில் எரியும் விளக்கொளிகள் வெளிறிய நீலப் பின்னனியோடு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டிருந்தன. எதிர்திசையில் அதிவேகமாக விரைவுச்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது நகரம். என்னருகில் இரு நைஜீரியர் வந்து அமர்ந்திருந்தனர். வோலே சோயின்கா இடையிடையே கவிதை, கவிதையெனக் காதில் விழ, உரக்கச் சிரித்துக்கொண்டனர். இடையிடையே ஓகாரா, அச்சிபே, … Read more

காலவரையின்றி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் ஒத்தி வைப்பு

டெலலி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. -9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் இதில் செல்ல இருந்தநிலையில். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராக்கெட் விண்ணில் … Read more

இன்று ஈரான் அதிபருடன் மோடி தொலைபேசியில் உரையாடல்

டெல்லி பிரதமர் மோடி இன்று ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அணுசக்தித் துறையை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பிற பகுதிகளையும் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் … Read more

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக … Read more

வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம்’

ஈரோடு வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம் இயற்றி உள்ளது. ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இன்றைய மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் … Read more

ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரம் மவுண்ட் தெனாலி எனும் மலைச்சிகரத்தை ஏறியதால், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிய முதல் தமிழ் பெண் என்கின்ற ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார் முத்தமிழ் செல்வி. முத்தமிழ் செல்வி விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகவும், … Read more