ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளில் திருத்தேர் ஆடி அசைந்து வருவதை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தை ஒருபக்கம்… ஏவுகணை தாக்குதல் மறுபக்கம்: அடங்காத ரஷ்யா

உக்ரைனில் ஐ.நா பொதுச்செயலாளரின் விஜயத்தின் போது கீவ் நகரம் மீது ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினின் படைகள் உக்ரைனின் தலைநகரை கைப்பற்ற தவறிய நிலையில், கடும் விமர்சனங்களுக்கு பின்னர் தலைநகரில் இருந்து பின்வாங்கியதை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய Shevchenko மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. இதில் 10 பேர்கள் காயம்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். தாக்குதலை அடுத்து, அந்த குடியிருப்பு வளாகம் … Read more

ஐபிஎல் 2022: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 146 ரன் மட்டுமே எடுத்தது. 147 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் … Read more

ஏப்ரல்-29: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

5ஜி அலைக்கற்றை ஏலம் எப்போது ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரூ. 7.5 லட்சம் கோடியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் என மத்திய தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 2022ல் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும். 2023க்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுது்து 5ஜி சேவையை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதம் துவங்க உளளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய … Read more

ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய துருப்புகள்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் நீடித்து வரும் நிலையில், இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக சுமார் 8,000 பிரித்தானிய வீரர்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட உள்ளனர். பிரித்தானிய வீரர்களுடன் இராணுவ டாங்கிகளும் நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய வாகனங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும். பிரித்தானிய வீரர்களுடன், நேட்டோ துருப்புகளும், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நோர்வே படைகளும் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். குறித்த நடவடிக்கையானது ஒற்றுமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் பாதுகாப்பு … Read more

ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர்

ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோவில், அறியலுரு மாவட்டம் கீழப்பழுவூரில் அமைந்துள்ளது. பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார். இவ்வூர் மேலப்பழுவூர், கீழப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான வடமூலநாதர் (ஆலந்துறையார்) கோவில் உள்ளது. கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,255,831 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,255,831 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,065,908 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 465,824,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,510 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.