ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்த தவான்

மும்பை:  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை 262 ரன்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 … Read more

துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது – அண்ணாமலை

சென்னை:  தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்தார். அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அ.தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். துணை வேந்தர் மசோதா பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்டதிருத்த மசோதா காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.  இந்நிலையில், துணைவேந்தர்களை மாநில … Read more

ஏப்-26: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மே. 4-ம் தேதி ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புது டில்லி: எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை மே. 4 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் மிகப்பெரும் பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை இறுதி செய்வதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது. இதன் மூலம் ரூ.65,000 முதல் 70,000 கோடி திரட்ட … Read more

லண்டன் கத்திக்குத்து சம்பவம்: உயிரிழந்தவர்களின் பெயர், புகைப்படம் வெளியீடு

லண்டனில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய தலைநகர் லண்டனில், Bermondsey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை 1.40 மணியளவில், சுமார் 5 நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பீதியடைந்த, அக்கம்பக்கதவர்கள் பொலிசாருக்கு தகவலளித்ததும், சம்பவம் இடத்துக்கு பொலிசார் விரைந்தனர். 600,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீட்டின் படுக்கையறை ஒன்றில், மூன்று பெண்களும் ஒரு … Read more

ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 88 ரன்கள் அடித்தார். சென்னை அணி பந்து வீச்சாளர்களில் பிராவோ 2 விக்கெட்டையும், மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். … Read more

நப்தாலி பென்னட் அழைப்பை ஏற்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து இஸ்ரேல், அமெரிக்கா என இரு நாட்டு தலைவர்கள் நேற்று முன்தினம் தொலைபேசியில் கலந்துரையாடினர். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பதட்டங்களைக் குறைத்து, அமைதியான முடிவை புனித ரமலான் காலத்தில் உறுதிசெய்ய வேண்டும். இதுகுறித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அதிகாரிகளுக்கு இடையே நடந்துவரும் முயற்சிகள் குறித்து அவர்கள் பேசினர் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு வருகை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,244,658 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.44 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,244,658 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 509,854,373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 462,930,023 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,447 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – அரசு தெளிவான முடிவை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா நேற்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்ட திருத்த மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை உடனே மாற்றுவது என்பது … Read more

பேராசிரியர்களுக்கு சம்பளம்: அரசுக்கு சம்மேளனம் கோரிக்கை| Dinamalar

புதுச்சேரி, :புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் 131 பேர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 182 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பொறியியல் கல்லுாரியாக இருந்தபோது அனைவருக்கும் மாத ஊதியம் காலதாமதமில்லாமல் வழங்கப்பட்டது.தற்போது, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்ற பின், மாத ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிப் பலன்களையும் வழங்கவில்லை.கடந்த மார்ச் மாத ஊதியம் இன்று … Read more