44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் … Read more

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீது இன்று மானிய கோரிக்கை விவாதம்

சென்னை : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.இரு துறைகள் மீது நடைபெறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.

முன்னெச்சரிக்கை டோஸ் டில்லியில் இலவசம் | Dinamalar

புதுடில்லி :டில்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ இலவசமாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் கடந்த வாரம் 100க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று பரவல், நேற்று முன் தினம் ஒரே நாளில் 1,009 ஆக உயர்ந்தது. இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இரு டோஸ் தடுப்பூசி … Read more

உ.பி: ஏன் தாமதம் எனக் கேட்ட தலைமை ஆசிரியர்… துப்பாக்கியால் சுட்ட உதவி ஆசிரியரால் அதிர்ச்சி

உத்திரப்பிரதேச மாநிலம் எட்டா என்னும் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் அரவிந்த் குமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பிரதாப் சிங் என்பவரும் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிரதாப் சிங் அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுப்பது, பள்ளிக்கு தாமதமாக வருவதுமாக இருந்துள்ளார்.  இது தொடர்பாக ஏற்கனவே தலைமை ஆசிரியருக்கும் உதவி ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் தாமதமாக பள்ளிக்கு வந்த பிரதாப் சிங்,  வருகைப் பதிவேட்டில் … Read more

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆக.10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் உள்பட 23 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை

சென்னை : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. சசிகலாவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெறுகிறது. நேற்று 200 கேள்விகள் வரை கேட்கப்பட்ட நிலையில் இன்றும் தனிப்படை விசாரிக்க உள்ளது.

தேதியை முடிவு செய்வதில் அரசு மும்முரம்!| Dinamalar

புது டில்லி: நாட்டின் மிகப்பெரும் பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை இறுதி செய்வதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது. இதன் மூலம் ரூ.65,000 முதல் 70,000 கோடி திரட்ட இருந்தது. மார்ச் மாதத்திற்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரியில் ஏற்பட்ட ரஷ்யா – உக்ரைன் போரினால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. … Read more

“இ.பி.எஸ் என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், ஆனால்..!" – சட்டசபையில் உதயநிதி கலகல

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் அனைத்துத் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உதயநிதியின் பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.  சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “சென்ற முறை நான் பேசியபோது … Read more

உக்ரைன் நகரில் புடினின் படுகொலைகளை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

உக்ரைனில் இருந்து மரியுபோல் நகரம் விடுவிக்கப்பட்டதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய துருப்புகளின் கொடூரங்கள் செயற்கைக்கோள் படங்களாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. சுமார் 2,000 வீரர்களும் பல நூறு அப்பாவி பொதுமக்களும் மட்டுமே தற்போது மரியுபோல் நகரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரில் முன்னெடுத்த படுகொலைகள், கொடூரங்களை தனியார் நிறுவனம் ஒன்று செயற்கைக்கோள் படங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. … Read more

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 16வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 16வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் … Read more