மத்தியஅரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏராளமான குளறுபடி – கான்கோர் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பு! சிஏஜி அறிக்கை…

டெல்லி: இந்தியாவில் ரயில்கள் வேகமாகவும் இயங்குவதில்லை, அதை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரயில்வே பொதுத்துறை நிறுவன மான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பைச் சந்தித்தித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சிஏஜி தோலூரித்து காட்டி உள்ளது. இந்தியாவின் தலைமை ஆடிட்டர் ஜெனரல், இந்தியாவில் ரயில்வே துறை குறித்த தணிக்கை அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில்,  இந்திய ரயில்வே … Read more

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் இந்தியா வருகை

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் இந்தியா வந்துள்ளார். இவருக்கு அகமதாபாத் ஜாம்நகர் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் வந்துள்ள பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இன்று மாலை 6 மணியளவில் நடைப்பெறவுள்ள ரோட் ஷோவிற்கு தலைமை தாங்க உள்ளனர். அங்கு, பிரதமர் மோடி உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், இருவரும் அங்கிருந்த அகமதாபாத் செல்லவுள்ளனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்குச் … Read more

தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி..!!

மும்பை: தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 704 புள்ளிகள் சரிந்து 56,463 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவன பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.

இரட்டை பட்டப் படிப்பு ஏன்? யு.ஜி.சி., தலைவர் விளக்கம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரட்டை பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது,” என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் தெரிவித்தார். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரண்டு … Read more

இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் UAE.. யாருக்கெல்லாம் நன்மை..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அமைச்சரவையில் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் குடியுரிமை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டு இருந்த புதிய தளர்வுகளை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கையும் கொடுத்துள்ளது. இப்புதிய தளர்வுகள் மூலம் இந்தியர்களுக்கு என்ன லாபம்..?! இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு! ஐக்கிய அரபு … Read more

சென்னை: பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் வழக்கு! – மாணவர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

பள்ளிக் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான வகையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணம் செய்யும்போது கீழே விழுந்து அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதைத் தடுக்க தமிழகக் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. காவல்துறையினர் சோதனை இந்த நிலையில், சென்னை மாநகரத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சென்னை மாநகர கமி‌ஷனர் … Read more

உக்ரைன் தாக்கி மூழ்கடித்த கப்பலிலிருந்த எங்கள் மகன்கள் எங்கே?: புடினை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ரஷ்யர்கள்

உக்ரைன் தாக்கி மூழ்கடித்த மாஸ்க்வா கப்பலிலிருந்த எங்கள் மகன்கள் எங்கே என அந்தக் கப்பலில் பணியாற்றியவர்களின் பெற்றோர் புடினிடம் கோபக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். வலிமையான நாடாகத் திகழ்ந்த ரஷ்யா, ஒரு சிறிய நாடான உக்ரைனை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. தொடர்ந்து தன் படைத் தளபதிகள், வீரர்கள், போர் வாகனங்கள் என இழந்து வரும் ரஷ்யாவுக்கு மற்றொரு பெரிய அடியாகவும் அவமானமாகவும் அமைந்துள்ளது ரஷ்யாவின் கௌரவமாக கருதப்பட்ட மாஸ்க்வா (Moskva) கப்பலை உக்ரைன் தாக்கி மூழ்கடித்துள்ள விடயம். … Read more

குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள்! தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்…

சென்னை: குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், தமிழகம் உற்பத்தி சூழல் அமைப்பில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் … Read more

டெல்லி வீரருக்கு கொரோனா: டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதும் போட்டி மும்பைக்கு மாற்றம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி புனேவில் நடைபெற இருந்த நிலையில், மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.  டெல்லி அணியில்  மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்பே வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது புனேவில் … Read more

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மடங்களுக்கான நிதியை விடுவிக்கக்கூட 30% கமிஷன் கேட்கிறது: லிங்காயத் சமூகத் தலைவர் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மடங்களுக்கான நிதியை விடுவிக்கக்கூட 30% கமிஷன் கேட்கிறது என லிங்காயத் சமூகத் தலைவர் குற்றம் சாட்டினார். மடங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு அறிவிக்கும் நிதியை, நேரடியாக பெற முடியாத சூழல் உள்ளது என லிங்காயத் சமூகத் தலைவர் திங்களேஸ்வர சுவாமி குற்றச்சாட்டு தெரிவித்தார். அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வருவதால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகாரித்துள்ளது என தெரிவித்தார்.