தமிழக டென்னிஸ் வீரர் விஸ்வா மரணம்: பிரதமர் மோடி இரங்கல்| Dinamalar

தமிழகத்தை சேர்ந்த 18 வயதுடைய டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் பலியானார். டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஸ்வா இவர் 83 வது சீனியர் மற்றும் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி சாலை மார்க்கமாக பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிரக் ஒன்று விஸ்வா பயணித்த வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் அவர் பலியானார். அவரது உடல் இன்று தமிழகம் வந்து … Read more

4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலி..!

மார்ச் மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 14.55 சதவீதமாக உள்ளது. இதன் உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய வர்த்தகப் பொருட்களின் விலைகளின் விலை உயர்வு தான். மார்ச் மாதத்தில் காய்கறிகள் விலை குறைந்துள்ள போதிலும் மொத்த விலை பணவீக்கம் நான்கு மாத உயர்வைத் தொட்டு உள்ளது. இது சூப்பர் நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை குறையலாம்.. நிபுணர்களின் செம கணிப்பு..! மொத்த விலை பணவீக்கம் … Read more

கர்நாடகா: மீன் பதப்படுத்துதல் பிரிவின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 தொழிலாளர்கள் பரிதாப பலி!

கர்நாடக மாநிலம் மங்களூரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள மீன் பதப்படுத்துதல் பிரிவான ஸ்ரீ உல்கா எல்.எல்.பி-யில், கழிவுநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்தவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய போலீஸ் கமிஷனர் குமார், “கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி ஒருவரைக் காப்பற்ற, கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் குதித்த 7 பேர் மூச்சுத்திணறி மயங்கிவிட்டனர். பின்னர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி: விவரம் செய்திக்குள்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், ஒரு ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வது இனி எளிதாகலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் அல்லாதவர்களைக் குறித்த விதிகள், அந்தந்த நாடுகளால்தான் பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஒரு ஐரோப்பிய நாட்டில் வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்தால், அவர்கள் அந்த நாட்டில் மட்டுமே வாழவும் பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ஐரோப்பிய … Read more

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று  அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெ.மறைவைத் தொடர்ந்து, அவரது கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து ஏற்பட்ட டிரைவர் உள்பட பலரது மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக … Read more

உத்தர பிரதேசத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம்

லக்னோ: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. காசியாபாத், லக்னோ, மீரட் ஆகிய நகரங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உ.பி. அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. இதையும் … Read more

ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

திண்டுக்கல்: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. திண்டுக்கல்லில் ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டடம், நிலம், உபகரணங்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளது.

கொடுங்கள்! மகிழ்ச்சி பெறுவீர்கள் ! ரம்ஜான் சிந்தனைகள்-16| Dinamalar

இந்த மண்ணை விட்டுச் சென்றதும் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது ” மண்ணுலகில் உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே… ஆனால் நீ எப்படி செயல்பட்டாய்?” எனக் கேள்வி கேட்கப்படும். ”இறைவா! பணத்தை பன்மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே உலகிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினால் அனைத்தையும் எடுத்து வருவேன்” என பதிலளிப்பான். ”மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பி வைத்தாய்” எனக் கேட்டால் பதிலளிக்க முடியாமல் திணறுவான். மறுமையின் பங்கு … Read more

டாடா ஸ்டீலின் சூப்பர் முடிவு.. எகிறி வரும் பங்கு விலை.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்!

நாட்டின் டாடா ஸ்டீல் ஷேர் பிரைஸ்டின் முன்னணி வணிக குழுமமான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இந்த பங்கின் விலையானது மே 3 அன்று பங்கு பிரித்தல் மற்றும் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லார்ஜ் கேப் நிறுவனமான இது வாடிக்கையாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, விரைவில் அறிவிப்பினை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பிரம்மாண்ட திட்டம் நிறைவு.. டாடா ரியால்டி-யின் சூப்பர் … Read more

ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

இணையதளம் மெதுவாக செயல்படுவதாக விண்ணப்பதாரர்கள் புகார் எழுப்பிய நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு, தாள்-1 மற்றும் தாள் 2 (TET)  எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 14 ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலரும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இணையதளம் மூலமாக … Read more