“இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” – ஜெ.பி.நட்டா கண்டனம்

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.இந்த புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுத்தியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதையொட்டி, இந்த விவகாரத்தில், `நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். எனவே எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன். … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில், மத்திய  அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஒரு வாரத்தில் சரணடையும் உத்தரவிட்டுள்ளது. லக்கீம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில், அவரது ஜாமினை எதிர்த்து காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த … Read more

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையும் படியுங்கள்…தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி – முதல்வர் ஸ்டாலின் … Read more

லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து : உச்சநீதிமன்றம்

டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அசாமில் புயல், மின்னல் தாக்குதல்: 3 ஆயிரம் வீடுகள் சேதம்; 20 பேர் உயிரிழப்பு

திஸ்பூர், அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து இதுவரை புயல் மற்றும் இடி, மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி திரிபாதி கூறும்போது, கடந்த 14ந்தேதியில் இருந்து 3 நாட்களில் 1,410 கிராமங்களை உள்ளடக்கிய 80 வருவாய் வட்டங்களை கொண்ட 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி, மின்னல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 14ந்தேதி பலத்த வேகத்துடன் புயல் காற்று வீச … Read more

ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!

இந்திய வர்த்தகச் சந்தை ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த நாளில் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளையும், வருவாய் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையும் வண்ணம் பல முயற்சிகள் எடுக்கப்பட உள்ள நிலையில், தற்போது முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில் 5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்? 3%, 8% வரி மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் மே மாதம் … Read more

Umran Malik: அச்சுறுத்தும் வேகம்; திமிறும் ஷார்ட் பால்கள்; சிதறும் யார்க்கர்கள்; யார் சாமி இவன்?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 20-வது ஓவரை முழுமையாக மெய்டனாக்கி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் உம்ரான் மாலிக். 22 வயதான உம்ரான் மாலிக்கின் இந்த சாகசத்தை கண்டு கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் இருக்கிறது. உண்மையில் அவர் வேகத்தைக் கண்டுதான் வியந்து நிற்கிறது. யார் இந்த உம்ரான் மாலிக்? ‘வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள்’ என ஒரு மேற்கோள் உண்டு. சத்தியமான வார்த்தைகள். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளரை யாராலும் உருவாக்கிவிட முடியாதுதான். … Read more

டக் அவுட் ஆன விஜய் சங்கர்! கேட்ச் பிடித்த பின் தோனி தந்த ரியாக்‌ஷன்.. குதூகலமடைந்த ரசிகர்கள் வீடியோ

ஐபிஎல் போட்டியில் மீண்டும் ஒருமுறை ரன் எடுக்க முடியாமல் அவுட்டாகி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் விஜய் சங்கர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவர் அவுட்டாகி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீக்‌ஷனா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையும் படிங்க: ஒவரின் ஆறு பந்துகளையும் … Read more

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர்  டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மீடும்  வரும் 21-ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததால், முடக்கப்பட்ட  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு  ரூ.50 கோடி பேரம் பேசி லட்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக புரோகர் சுகேஷ் … Read more

உ.பி.யில் சோகம் – லாரியுடன் ஜீப் மோதிய விபத்தில் 6 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலியின் நசிராபாத் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கிராமத்தை நோக்கி ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அதில் அமேதி பகுதியைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். கவுரிகஞ்ச் பகுதி அருகே எதிரே வந்த லாரியுடன் ஜீப் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை … Read more