ஈஸ்டர் கூட்டத்திற்கு சென்ற பேருந்து விபத்து: 35 பேர் மரணம்

ஜிம்பாப்வேயில் ஈஸ்டர் கூட்டத்திற்கு தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் தரையிறங்கியதில் குறைந்தது 35 பேர் இறந்தனர் மற்றும் 71 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வேயின் தென்கிழக்கு நகரமான சிப்பிங்கில் (Chipinge) வியாழன் இரவு பேருந்து விபத்துக்குள்ளானது. சிப்பிங்கில் ஈஸ்டர் கூட்டத்திற்குப் பயணித்த உள்ளூர் சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தின் உறுப்பினர்களை பேருந்து ஏற்றிச் சென்றது. “நேற்று இரவு நடந்த ஒரு விபத்தை என்னால் உறுதிப்படுத்த முடியும். இதுவரை, இறந்தவர்களின் … Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்…!

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுருவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீண்டும்  கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி, மாண்புமிகு … Read more

வி‌ஷ வாயு தாக்கி தொழில் அதிபர்- மகன் உள்பட 3 பேர் பலி

ஆவடி: ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். தொழில் அதிபரான இவர் சிவசக்தி நகர் 52-வது தெருவில் பெரிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ரதி. மகன் பிரதீப்குமார். இவர்களை தவிர பிரேம்குமாருக்கு 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. இன்னொரு மகள் படித்து விட்டு வேலை பார்த்து வருகிறார். பிரேம்குமார் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். பிரேம்குமார் வீட்டு … Read more

நீட் தேர்வு தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: 14 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் குடித்த நீட்தேர்வு தேவையில்லை என்ற நிலை மக்களின் மத்தியில் எழுந்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தேநீர் விருந்து புறக்கணிப்பு ஆளுநரின் மனதை தொடும். கட்டாயம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நிரப்ப தலைமை நீதிபதி என்.வி. ரமணா உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”நீதித்துறையில் காலியான இடங்களை நிரப்பவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில், நீதித்துறை மாநாட்டை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா துவக்கி வைத்து பேசியதாவது:நாட்டில் போதுமான நீதிமன்றங்களும், நீதித்துறைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இருந்தால்தான் நீதியைப் பெற முடியும். நம் நீதித்துறை அளவுக்கதிகமான சுமையுடன் செயல்பட்டு வருகிறது. நான் … Read more

இன்றே கடைசி நாள்.. டிசிஎஸ்-ல் கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. எப்படி?

இந்தியாவின் முன்ணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் அதன் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்த டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பில், பிஇ, பிடெக், எம் எம் டெக், எம்சிஏ, எம் எஸ்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து, 2022ம் ஆண்டு பாஸ் அவுட் பிரெஷ்ஷர்களை பணியமர்த்துவதாக தெரிவித்துள்ளது. இதற்கு பதிவு செய்வதற்கு கடைசி நாள் ஏப்ரல் 15 ஆகும். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இதன் முடிவுகள் வெளியான பிறகு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும் … Read more

மாநில சாதனைகள் 17, தேசிய போட்டியில் வெள்ளி, அடுத்து சர்வதேச போட்டி – யோகாவில் சாதிக்கும் மாணவர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் – லீலாவதி தம்பதியின் மகன் டால்வின்ராஜ். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே யோகா பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு, அப்துல்கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் மாவட்ட அளவில் 37 சாதனைகளும், தமிழ்நாடு அளவில் 17 சாதனைகளும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 11-ம் தேதி கோவாவில் … Read more

ரஷ்ய கிராமத்தை குண்டு போட்டு சூரையாடிய உக்ரைன்!

ரஷ்ய மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் நகரிலே உக்ரைன் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை பெல்கோரோட்டில் உள்ள கிராமம் ஒன்றின் மீது உக்ரைன் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் … Read more

தமிழக அரசு எந்த திட்டத்துக்கு நிதி கேட்டாலும் அள்ளி கொடுப்போம்! மத்திய அமைச்சர் எல்.முருகன்

விருதுநகர்: தமிழக அரசு எந்த திட்டத்துக்கு நிதி கேட்டாலும் அள்ளி கொடுக்க மத்தியஅரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். முன்னேற துடிக்கும் மாவட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மத்திய தகவல் ஒலி பரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்  தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம், கல்வி, விவசாயம், குடிநீர், மத்திய அரசு … Read more

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம்- எல் முருகன்

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக உள்பட பல்வேறு தமிழக கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர். நீட் விலக்கு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இன்னும் கவர்னரிடம் நிலுவையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் … Read more