14/04/2022: தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கொரோனாபாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 18,716  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,58,91,265 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று  25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,188 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி … Read more

நீட் விலக்கு மசோதா: மீண்டும் கவர்னருக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர்

சென்னை: நீட் விலக்கு மசோதாவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின், நான் நேரில் சந்தித்து வலியுறுத்திய போது மசோதாவை அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்தார். மசோதா பற்றி கவர்னர் உறுதியான பதிலளிக்காததால் தேநீர் விருந்தில் பங்கேற்பது முறையாக இருக்காது. கவர்னருக்கும் மாநில அரசுக்குமான உறவு … Read more

எளிமையாக நடந்தது நடிகர் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்

மும்பை ;’பாலிவுட்’ நடிகர்கள் ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும், மும்பையில் உள்ள வீட்டில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ‘பாலிவுட்’ நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராயிருந்து மறைந்த ராஜ் கபூரின் பேரனும், மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், 39, இயக்குனர் மகேஷ் பட் மகள் ஆலியா பட், 29, இருவரும் 2018ல் இருந்து காதலித்து வந்தனர். இவர்கள் 2019ல் திருமணம் செய்து கொள்வர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு … Read more

தங்கம் விலை சரிவு தான்..ஆனாலும் பெரும் ஏமாற்றம் தான்.. ஏன்?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் இது சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் எனலாம். இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் நாளையும் விடுமுறையாகும். எனினும் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்து இருந்தாலும், அது இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரிய பயனைக் கொடுக்கவில்லை என்றே கூறலாம். பெரும் ஏற்றத்திற்கு பிறகு ஆறுதல் தந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் … Read more

சச்சினின் காலில் திடீரென விழுந்த ஜாம்பவான் வீரர்!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் திடீரென சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு சச்சின் டெண்டுல்கர் மெண்டராக உள்ளார். போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் இரண்டு வரிசையாக எதிரெதிரில் வந்து கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது பஞ்சாப் அணி வீரர்களை சச்சின் பாராட்டி வந்தபோது, பஞ்சாப்பின் பீல்டிங் … Read more

மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்… பிரபலங்கள் பங்கேற்பு

மும்பை பாந்திராவில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வாஸ்த்து இல்லத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மறைந்த இந்தி நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூருக்கும் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்டிருக்கும் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்று மெஹெந்தி பங்க்ஷனுடன் திருமண சடங்குகள் துவங்கியது, ஆலியா பட்டை திரையுலகில் அறிமுகம் செய்த கரண் ஜோகர் அவருக்கு … Read more

பழமைவாய்ந்த 2 கோயில்களை இடிக்க இடைக்கால தடை – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம், பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயிலும், வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, இரு கோயில்களையும் இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ள பாளையத்தைச் சேர்ந்த கோபிநாதனும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நூறாண்டுகள் பழமையான … Read more

முகேஷ் அம்பானி புதிய திட்டம்.. பிரிட்டன் பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்ஸ் (Boots) என்னும் பார்மசி மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளார். சீரிஸ் 3 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது? இந்தப் பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் பிரிட்டன் உட்பட 6 நாடுகளின் வர்த்தகச் சந்தைக்குள் நுழைய முதல் படியாக இருக்கும். டீல் மதிப்பு என்ன தெரியுமா..? முகேஷ் அம்பானி இந்தியாவின் 2வது பெரும் … Read more

Kgf -2 : 19 வயது இளைஞருக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்த பிரஷாந்த் நீல்! படத்தின் எடிட்டர் இவர்தானா?!

KGF-2 படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது. படத்திற்கான டிக்கெட்கள் இலட்சக்கணக்கில் விற்று தீர்ந்திருப்பதாக ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளமான BookMyShow தெரிவிக்கிறது. முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. களமும் பெரிது என்பதால் இதற்கான உழைப்பும் பெரிது. பெரியளவில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் எடிட்டர் பற்றிக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். உஜ்வல் குல்கர்னி இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இவருக்கு வயது 19. உஜ்வல் … Read more