சென்னை-யில் ஐபோன்13 உற்பத்தியை துவங்கிய ஆப்பிள்.. விலை குறையுமா..?!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியாவிற்கும் மாற்றிய நிலையில், பல மாடல் போன்களைத் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுநாள் வரையில் பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை மட்டுமே இந்தியாவில் தயாரித்து வந்த ஆப்பிள், தற்போது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் லேடெஸ்ட் மாடலான ஐபோன் 13 சீரியஸ் போன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது. ஐபோன் உற்பத்தி நிறுத்தம்.. ஆப்பிள் முடிவால் முதலீட்டாளர்கள் … Read more

"அண்ணா, கருணாநிதியின் பேச்சுகளில் சமஸ்கிருதம்தான் அதிகமிருக்கும்!"- எழுத்தாளர் ஜெயமோகன்

பொதுவாகவே திராவிடம், திராவிட அரசியல்மீது உங்களுக்கு ஒரு முரண் கருத்து உள்ளது. ஏன்? தமிழக அரசியலில் தமிழியக்க அரசியல் என்று உண்டு. அது தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழ் பதிப்பியக்கம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதில் குறிப்பாக தனித் தமிழ் இயக்கத்தில் எனக்கு மிகத் தீவிர ஈடுபாடு உண்டு. தமிழில் தனித்தமிழில் எழுதக்கூடிய எழுத்தாளன் நான். சிலப்பதிகாரத்தில் உள்ள சமஸ்கிருதம்கூட என்னுடைய ‘கொற்றவை’ நாவலில் இருக்காது. ‘வெண்முரசு’ நூலில் நூறு சதவிகிதம் தமிழ்ச் சொல் … Read more

கெத்தாக நிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! பயத்தில் ஒளிந்து கொண்ட புடின்… வெளியான புகைப்படம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில் பிரித்தானிய பிரதமர் போரீஸ் அங்கு சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்த புகைப்படம் வெளியானதையடுத்து புடின் அச்சத்தில் ஒளிந்து கொண்டது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை உக்ரேனிய எம்.பி லிசியா வசிலிங்கோ வெளியிட்ட நிலையிலேயே அது பெரியளவில் வைரலாகியுள்ளது. உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார். Oh yes! Be afraid, … Read more

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்கிறது. முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினர். தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டம் அலட்சியப்படுத்தப்படுவதாக உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும்?- அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: வேலூர் மாவட்டம் சேனூர்அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் … Read more

மத்திய பல்கலை.யில் நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் முன்மொழிக்கப்பட்டது. மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடர்கிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கடலில் மூழ்கி சகோதரிகள் பலி| Dinamalar

மங்களூரு : சுரத்கல்லின் அரபிக்கடலில், உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சென்ற போது, இரண்டு இளம் பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.தட்சிண கன்னடா, மங்களூரை சேர்ந்த குடும்பத்தினர், தங்களின் உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, சுரத்கல்லின் கடற்கரைக்கு நேற்று காலை வந்தனர்.அப்போது வைஷ்ணவி, 18, அவரது தங்கை திரிஷா, 17, மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை, கடல் அலை அடித்து சென்றது.இதை பார்த்த நீச்சல் வீரர்கள், ஊர்க்காவல் படையினர், மூவரையும் கடலில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்; முதலுதவி சிகிச்சையளித்தனர். எனினும் … Read more

முதல் நாளே ஏமாற்றம் தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது. இந்த வாரத்தில் பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கும் நிலையில், அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. அன்னிய முதலீடுகள் கடந்த ஏப்ரல் 8 … Read more

கோவை: `கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்' – வைரலான விளம்பர பலகை… உண்மை என்ன?!

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் ‘வாசு மணல் சப்ளையர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடை இயங்கி வருகிறது. கட்டடங்களுக்குத் தேவையான மணல், செங்கல், எம்-சாண்ட், ஜல்லி, சிமென்ட் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அந்தக் கடை பெயர் பலகையில், மண் கடத்தல் ‘கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. ‘இப்படி வெளிப்படையாக மண் கடத்தி விற்கலாமா?’ என்று கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இதுகுறித்து வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்திரை … Read more

தினமும் இரவில் ஒரு கப் பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. இதனால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம். இதையும் … Read more