முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முடிவென்ன?

தனியார் துறையை சேர்ந்த மிகபெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி அதன் 4ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. எனினும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கும் விதமாக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனினும் இது குறித்தான விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் 31, 2022ம் நிதியாண்டிற்காக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு வரலாம் என்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா.. கட்டாயம் இதை செய்யுங்க.. ! வங்கி குழு கூட்டம் இவ்வங்கியின் குழு கூட்டம் … Read more

தூத்துக்குடி பாகம்பிரியாள் திருக்கோயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரதவீதிகளில் வலம் வந்த திருத்தேர்!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருத்தேர் கயத்தாரைத் … Read more

டேவிட் வார்னர் விக்கெட்டை தட்டிதூக்கிய வனிந்து ஹசரங்கா! ஏற்று கொள்ளமுடியாமல் அழுத மகளின் வீடியோ

ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் அவுட்டானதை ஏற்று கொள்ள முடியாமல் அவர் மகள் அழுத வீடியோ வெளியாகியுள்ளது. 27வது லீக் போட்டியில் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டெல்லி வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், வனிந்து ஹசரங்காவின் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயற்சி செய்தார். pic.twitter.com/MueGBfDeOf … Read more

விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன். இவர் தன்னுடைய விளைநிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டப் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டாா். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி சடலத்துடன், தருமபுரி – பென்னாகரம் சாலையில், ஏ.செக்காரப்பட்டியில் அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக, பாமக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் … Read more

மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார்- நடிகை ரோஜா பேட்டி

திருவண்ணாமலை: தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான நடிகை ரோஜா அப்படத்தின் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ரோஜா ஆந்திராவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அமைச்சர் ரோஜா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். விநாயகர், அண்ணாமலையார் அம்மன் சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். பிறகு நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா காரணமாக 2 ஆண்டாக அருணாசலேஸ்வரர் … Read more

சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் 15 மணிநேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 15 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருமலையில் குறைந்திருந்த பக்தர்களின் வருகை, தற்போது தேவஸ்தானம் வெளியிட்டு வரும் தரிசன டிக்கெட்டுகளால் அதிகரித்து வருகிறது.வார இறுதி நாட்களில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில், 70 ஆயிரத்தை தொடுகிறது.திருமலை வைகுண்டத்தில் உள்ள 16 காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். … Read more

5,500 அடி உயரத்தில் சித்திரை முழுநிலவுத் திருவிழா; கண்ணகி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்குத்தொடர்ச்சிமலை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்குக் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் கேரளாவின் குமுளியில் … Read more

பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பொறுப்பு துணைநிலை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி தமிழிசையும் இங்கு வந்து அவருக்கு இடப்பட்ட வேலையை முடித்தார். அதன்பிறகு தேர்தலின்போது … Read more

5,000 பேர்கள் வெளியேற்றம்… மொத்தமாக அழிந்த 200 வீடுகள்: வெளிவரும் பகீர் சம்பவம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பற்றியெரியும் காட்டுத்தீயால் இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கன மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். ருய்டோசோ கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 200க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளது. சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், 9.6 சதுர மைல் தொலைவுக்கு வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. அதிக மின் அழுத்த கம்பிகளால் நியூ மெக்சிகோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், குடியிருப்பு ஒன்றில், மொத்தமாக உடல் கருகிய … Read more