“தனிப்பட்ட முறையில் ஆளுநரிடம் எந்த விரோதமும் இல்லை!” – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது. இதன் காரணமாக ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்குமிடையே மோதல் மேலும் அதிகரித்திருப்பதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்” என கூறியுள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய … Read more

அவர் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வரலாம்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வருகை தரலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, விளாடிமிர் புடினின் உண்மை முகம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் … Read more

திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021–22 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டது. அதில், ஒருவர், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் … Read more

ஜி.எஸ்.டி. வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவர்- ராமதாஸ்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2015-16 ஆண்டின் வருவாயை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் வரி வருவாய் 14சதவீதம் உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு நிர்ணயித்திருந்த ஐந்தாண்டு காலம் … Read more

கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். விவசாயிகளுக்கு சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என கூறினார்.

இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கோவிட் | Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,17) 1,150 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,183 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,44,280 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,985 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,10,773 ஆனது. தற்போது 11,542 … Read more

சாமானியர்கள் பெரும் கவலை.. எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று விலை என்ன தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்றும் பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்க முதலீட்டாளர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சாமானியர்கள் தங்கத்தினை இனி நினைத்து மட்டும் தான் பார்க்க முடியும்போல, வாங்குவது இயலாத காரியம் எனலாம். ஏனெனில் அந்தளவுக்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் கூறியதுபோல 2000 டாலர்களை விரைவில் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் சரியுமா? அடுத்து … Read more

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, ஐந்து பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் … Read more

நீ எனக்கு அளித்த அன்பு, கவனிப்புக்கு…. மனைவியை வாழ்த்தி உருகிய இலங்கை பிரபலம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கவுசல் சில்வா தனது 8ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில் மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் கவுசல் சில்வா. இவருக்கும் நடிகை பாக்யா ஹெட்டியாரச்சிச்சி என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில்வா – பாக்யா தம்பதி இன்று தங்களது 8ஆம் ஆண்டு … Read more

செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம்: இன்றைய சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில்!

சென்னை: செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம் உள்பட சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு சட்டப்பேரவையில் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவீன தங்கும் விடுதி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். கேள்வி முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு … Read more