சசிகலா சேலம் பயணம்… ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்! தெரிந்தேதான் செய்தாரா முதல்வர்? -கழுகார் அப்டேட்ஸ்

நிதியமைச்சர் அட்வைஸ்… ஏற்றுக்கொண்ட முதல்வர்!மானியக் கோரிக்கையில் பரிசு கிடையாது! தமிழக சட்டசபையில் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது, அந்தந்தத் துறை சார்பாக தங்கள் துறை அலுவலர்களுக்கு ஸ்பெஷல் உணவுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை அப்படி எதுவும் வழங்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. கழுகார் “நாம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவரும்போது, இது போன்ற செலவுகள் வேண்டாம்” என்ற நிதியமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்தே முதல்வர் அலுவலகம் இப்படியொரு முடிவை எடுத்ததாம்! … Read more

கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ்  அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. … Read more

முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க கூடாது: பிரகலாத் ஜோஷி

பெங்களூரு: தார்வாரில் முஸ்லிம் வியாபாரி ஒருவரை சிலர் தாக்கி அவர் விற்பனை செய்ய வைத்திருந்த தர்ப்பூசணி பழங்களை அழித்தனர். இந்த நிலையில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அமைதி-மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மற்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது என்பது வேறு விஷயம். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். மத அடிப்படைவாதிகள் பிரச்சினையை தூண்டிவிடுகிறார்கள். இதை ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்புகள் மற்றும் அரசு … Read more

அதிமுக பொதுச் செயலாளர் யார்?.. இன்று தீர்ப்பு.. எதிர்பார்ப்பில் சசிகலா

சென்னை : சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்தார்.  

பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் ஆய்வு| Dinamalar

திருக்கனுார் : கே.ஆர்.பாளையம் பகுதியில் இயங்கும் பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் போது, வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள குடோனில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டனர். வெளி நபர்களிடம் மொத்தமாக பட்டாசுகள் விற்பனை செய்யும்போது, அவர்களிடம் இருந்து அடையாள அட்டை நகலை பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும் என உரிமையாளருக்கு போலீசார் அறிவுறுத்தினர். தொழிற்சாலை நடத்துவதற்காக பெறப்பட்ட … Read more

குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணசாமி கோவிலுக்கு கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர், ‘குருவாயூர் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும்’ என்றும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் … Read more

“இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை!” – உத்தவ் தாக்கரே காட்டம்

மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளாக இருந்த சிவசேனாவும், பாஜகவும் இப்போது இப்போது விரோதிகளாக இருக்கின்றன. சிவசேனா தலைவர்கள் மீது அமலாக்கப்பிரிவு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் பாஜக தொடர்ந்து இந்துத்துவாவுக்கு உரிமை கோரி வருவது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்று இருக்கவில்லை. கடவுள் ராமர் பிறந்திருக்காமல் இருந்திருந்தால் அரசியலுக்கு பாஜக என்ன பிரச்னையை எழுப்பி இருக்கும். இப்போது பிரச்னை … Read more

விடுதியில் அசைவ உணவு நிறுத்தம்: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கடுமையான மோதல்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதி கேண்டீனில் இறைச்சி பரிமாறப்பட்டது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரி விடுதியில் மதியம் 3:30 மணியளவில் ராம நவமி அன்று இறைச்சி பரிமாறப்பட்டதற்கு எதிராக எழுந்த தகராறில் இரண்டு மாணவர்கள் குழுக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கியதில் 6 மாணவர்கள் வரை காயமடைந்துள்ளனர். பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் தான், … Read more

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

சென்னை: 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 18, 19 தேதிகள் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 21ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான … Read more

விலைவாசி உயர்வு குறித்து விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் காங். பெண் தலைவர் வாக்குவாதம்

புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.கவுகாத்தியை அடைந்தவுடன், பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா வந்தார். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி … Read more