பிட் காயின் ஊழல் விவகாரம் விசாரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் வருகை; சி.பி.ஐ., மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘கர்நாடகாவின், ‘பிட் காயின்’ ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் டில்லி வந்துள்ளதாக கூறப்படும் தகவல் அடிப்படை ஆதரமற்றது’ என, சி.பி.ஐ., மறுத்துள்ளது. கர்நாடகாவில், ‘பிட் காயின்’ எனப்படும், ‘டிஜிட்டல் கரன்சி’ வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தொடர்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டினர். இந்த பிட் காயின் ஊழல் … Read more

1 லட்சம் பேருக்கு வாய்ப்பளித்த டிசிஎஸ்.. அடுத்த நிதியாண்டில் எத்தனை பேருக்கு வாய்ப்பு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS), கடந்த நிதியாண்டில் 1 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 40,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் வரலாறு காணாத அளவுக்கு 1,03,546 பேரை பணியமர்த்தியுள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் 40,000 பேரை பணியமர்த்தியுள்ளது. முதல் நாளே ஏமாற்றம் தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்! மொத்த பணியமர்த்தல் நிறுவனம் ஒரு காலாண்டில் … Read more

டெம்போ ட்ராவலரில் எடுத்துச் செல்லப்பட்ட 264 பவுன் நகைகள் மாயம்; தீவிர விசாரணையில் தனிப்படை போலீஸ்!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தங்கபெருமாள். இவர் மகன்களான பெரியசாமி, ஆனந்த ராசு ஆகிய இருவரும், அவர்களுடைய குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டோருடன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊருக்கு டெம்போ ட்ராவலர் வேன் மூலமாக நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, தங்களது உடைமைகளை சூட்கேஸில் வைத்து வேனின் மேற்பகுதியில் தார்ப்பாய் கொண்டு கட்டி சென்றுள்ளனர். சென்னையைச் சேர்ந்த பாண்டி என்பவர் வேனை இயக்கியுள்ளார். இந்நிலையில், … Read more

உக்ரேனியர்களுக்காக விமானங்களை அனுப்ப தயாராகும் ஜேர்மன் ஆயுதப்படை!

 உக்ரேனியர்களை நாட்டிற்கு அழைத்து வர ஜேர்மன் ஆயுதப்படை அதன் விமானங்களை அனுப்ப தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 47வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் பயங்கர இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த உக்ரேனியர்களை வெளியேற்ற ஜேர்மன் ஆயுதப்படை, அதன் விமானங்களை அனுப்ப தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக இன்று, Cologne-Wahn ராணுவ விமானத்தளத்திலிருந்து, போலந்தின் தென்கிழக்கில் உள்ள Rzeszow-க்கு ஜேர்மன் ஆயுதப்படை A310 MedEvac விமானத்தை அனுப்பியுள்ளது. … Read more

உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை..!

டெல்லி: உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது, இருதரப்பு உறவு, ரஷ்யா – உக்ரைன் விவகாரம், இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவும், இந்தியாவும் உலகின் மிகச்சிறந்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற  21-வது லீக் ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்,  வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத்  அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மத்தீவ் வேட் 19 ரன்னிலும், சுப்மன் கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  சாய் சுதர்சன் 11 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார். எனினும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா … Read more

ஐபிஎல் 2022: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி

மும்பை: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

நெடுஞ்சாலையில் காலாவதியான மருந்து பாக்கெட்டுகள்| Dinamalar

மங்களூரு : காலாவதியான மருந்துகள், மருத்துவ கழிவுகளை அறிவியல் முறைப்படி அழிக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்தும், மங்களூரின் சந்துார் அருகில், தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மருந்து பாக்கெட்கள் வீசப்பட்டுள்ளன.தட்சிண கன்னடா மங்களூரு நகரின், சந்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மரங்கள், செடிகள், புதர்கள் நிறைந்த பகுதிகள் உள்ளன. இங்கு பெருமளவில் மருந்து பாக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் மருந்துகள் பாக்கெட்டுகள், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயன்படுத்தும் … Read more

100 ஊழியர்களுக்கு 100 கார் கிப்ட்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை Ideas2IT நிறுவனம்..!

பொதுவாகக் குஜராத் வைர ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் லாபத்தில் ஒரு பகுதியை முக்கியமான ஊழியர்களுக்கும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக அளிப்பது வழக்கம். ஆனால் இந்தக் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது என்றால் மிகையில்லை, குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழர்களால் நிர்வாகம் செய்யப்படும் முன்னணி நிறுவனங்கள் இதுபோன்ற டிரெண்டை உருவாக்குவது பல கோடி இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு BMW கார் பரிசு.. சென்னையிலுள்ள ஐடி … Read more

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்!" – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள் எனக் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார். இந்துத்துவா அமைப்புகள் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளைத் தடை செய்ய வேண்டும், ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும், பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதேபோல, முஸ்லிம் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் அவர்களால் ஓட்டப்படும் டாக்சிகள், ஆட்டோக்களை புறக்கணிக்க வேண்டும், கர்நாடகா மசூதிகளிலுள்ள ஒலிபெருக்கிகளை எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் மற்றும் … Read more