சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் இல்லை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையல் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக … Read more

சட்டவிரோதமாக மணல் கடத்தல்: ஏற்கனவே 5 பாதிரியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் கனிமவளத் துறை அதிகாரியும் கைது…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு, கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் செய்த வழக்கில், ஏற்கனவே  கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்பட 5 பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவிய முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் சஃபியா கைது செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், தற்போத  … Read more

இந்தியாவை சிதற வைக்கும் நோக்கில் அமித்ஷா செயல்படுகிறார்- கே.எஸ்.அழகிரி

கோவை: பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோரி நாடு முழுவதும் எதிர்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், ஜி.எஸ்.டி வரியை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் 18 நாட்கள் நடக்கும் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று கோவையில் தொடங்கியது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள செஞ்சிலுவை … Read more

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.: சசிகலா

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா கூறியுள்ளார். உரிமையியல் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் நாமக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்.

அனுஷ்டான குளத்தை சீரமைத்து பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை| Dinamalar

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவில் எதிரே அமைந்துள்ள, அனுஷ்டான குளத்தை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. ராமானுஜர், காஞ்சிபுரத்தில் தங்கி, வரதராஜப் பெருமாளுக்கு சேவை செய்த காலத்தில், இங்குள்ள அனுஷ்டான குளத்தில் குளித்து, பெருமாளுக்கு சாலை கிணற்று தண்ணீர் எடுத்து சென்றதாக ஐதீகம். முகம் சுளிப்புஆண்டுதோறும் தை மாதம் நடக்கும் அனுஷ்டான உற்சவத்தின்போது, செவிலிமேடு ராமானுஜர் கோவிலுக்கு, வரதராஜ பெருமாள் எழுந்தருள்வார். … Read more

விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | Sakthi Vikatan

விருச்சிகம் guru peyarchi | ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் #Viruchigam #GuruPeyarchi #GuruPeyarchiPalan Source link

நவம்பர் 15 – 22ந்தேதிவரை பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம்! சட்டப்பேரவையில் தகவல்..

சென்னை: பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்க நடவடிக்கை. போக்சோ … Read more

முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஸ்பத்திரியில் அனுமதி- நலம் விசாரித்த முதலமைச்சர்

சென்னை: அ.தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக இருந்தவர் தனபால். கடந்த சட்டசபை தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார். இந்த நிலையில் தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தனபால் பங்கேற்று வருகிறார். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அபராதம் வசூலிக்க சென்னை கால்சென்டர் தொடங்கி வைத்த பின் காவல் ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாள் ஒன்றுக்கு 10,000 ரசீதுகள் வழங்கப்படுகின்றன; வாகன ஓட்டிகள் முறையாக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

72 மணி நேரத்தில் முதியோர் பென்ஷன்| Dinamalar

பெங்களூரு : ”போன் செய்தால் 72 மணி நேரத்தில் முதியோர் ‘பென்ஷன்’ உட்பட பிற நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது,” என வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறினார்.கர்நாடகாவில், ‘வீட்டு வாசலுக்கே பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கிராம கணக்காளர் மற்றும் வருவாய் கண்காணிப்பாளர் அளவில் சில புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து, போன் செய்தால் ’72 மணி நேரத்தில் பென்ஷன்’ எனும் திட்டம் வருவாய் துறை சார்பில் … Read more