`உயிரோடுதான் இருக்கேன்..' – இறந்துவிட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கிய அதிகாரிகள் – மூதாட்டி வேதனை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற 67 வயது மூதாட்டி மனு அளித்தார். அதில், `ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடுகுசந்தை சத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் மகாலிங்கம் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். எங்கள் இரு மகன்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து … Read more

பிரான்சில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருக்க அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

பிரான்சில் சில பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு பிரெஞ்சு மொழி சரளமாகப் பேசத் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா பிரான்சில் பணி தேடும் உங்களுக்கு பிரெஞ்சு மொழி பேசத்தெரியாது என்றாலும், அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. காரணம், நீங்கள் மெல்ல மெல்ல பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் நேரத்திலேயே, நீங்கள் விண்ணப்பிப்பதற்கு ஏராளமான பணிகள் பிரான்சில் உள்ளன. அவை என்னவெல்லாம் என பார்க்கலாமா? 1. குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் வேலை (Nanny/au pair) பிரான்சுக்கு வரும் இளம் வயதினர் பலர் பிரெஞ்சு … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரிப்பு! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும்,  … Read more

அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கெடு- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

புதுடெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை மத்திய அரசு நிராகரித்திருந்தது. டிஆர்எஸ் அரசு, நெல்கொள்முதல் விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும், இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்வதாக தெலுங்கானா மாநில பாஜக குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ்,  கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரி எம்எல்ஏவான ரோஜாவுக்கு ஆளுநர் விஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆந்திராவில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரோஜா உள்பட 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.    

பெங்., மாநகராட்சி பாதையில் பி.டி.ஏ., சொத்து வரி வசூலிக்க புதிய விதிமுறை| Dinamalar

பெங்களூரு : பெங்களூரை அபிவிருத்தி செய்யும் நோக்கில், சொத்து வரி வசூலில் பெங்களூரு மாநகராட்சி வழியை பின்பற்ற, பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.பெங்களூரில் அபிவிருத்தி திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், 1976ல் பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம் செயலில் இறங்கியது. இதுவரை 63 க்கும் மேற்பட்ட லே — அவுட்களை, அபிவிருத்தி செய்துள்ளது. 46 ஆண்டுகளாக அமைத்த லே — அவுட்கள், அதன் நிர்வகிப்புக்கு உட்பட்ட சொத்துகளுக்கு, நிதியாண்டின் எந்த தினத்திலாவது சொத்து வரி செலுத்துவதற்கு வாய்ப்பளித்தது.வரி … Read more

மத்திய அரசின் இ-பாஸ்போர்ட்: என்ன ஸ்பெஷல்..? என்ன நன்மை..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..?!

உலக நாடுகளில் பாஸ்போர்ட் என்பது பொதுவாகப் பேப்பர் வடிவத்தில் தான் உள்ளது, இதன் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கப் பல புதுமைகள் ஒவ்வொரு நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த இ-பாஸ்போர்ட் விநியோகம் மூலம் பாதுகாப்பு தன்மையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் போலி பாஸ்போர்ட்களை முழுமையாகத் தடுக்க முடியும். இ-பாஸ்போர்ட் என்றால்..? முழுக்க முழுக்க டிஜிட்டல் பாஸ்போர்ட் தான் இந்த இ-பாஸ்போர்ட்-ஆ..? இ-பாஸ்போர்ட் எப்படி இயங்கும்..? உலகிலேயே சக்தி … Read more

மலைப்பகுதியில் ரோப் கார் விபத்து; 2 பேர் பலி,10-க்கும் மேற்பட்டோர் காயம் – மீட்புப் பணிகள் தீவிரம்

ஜார்கண்ட் மாநிலத்தின், தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலைப்பகுதியில் `ரோப்-வே’ கேபிள் கார்கள் இயக்கப்படுகிறன. இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வே-வான திரிகுட்டில் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. நேற்றைய தினம் ரோப் கார்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வந்தபோது, திடீரென தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு ரோப் கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த இரண்டு ரோப் கார்களில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மருத்துவமனை சிகிச்சையின் … Read more

அசைவ உணவு உண்டதற்காக மாணவிகள் மீது இரத்தம் சொட்ட சொட்ட கொடூர தாக்குதல்! சீமான் கடும் கண்டனம்

அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ராம நவமியான நேற்று அசைவ உணவு வழங்கக்கூது என பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம் நடத்தியது. இதற்கு இடசாரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவேரி தங்கும் விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அசைவ உணவு உண்டதற்காக … Read more

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டிருந்தன. அந்த வழக்குகள் அனைத்தும், திமுக பதவி ஏற்றதும்,  வாபஸ் பெறப்பட்டன. இதில் பல ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே … Read more