குவைத் திணறல்…. வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர். தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள் விசாவை புதுப்பிக்க முடியாமல் சொந்த நாட்டிலேயே தங்கவும் நேர்ந்தது. இந்நிலையில் தற்போது திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட திறன் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு நாளிதழ் ஒன்று முக்கிய செய்தியாக பதிவிட்டுள்ளது. குறிப்பாக ரமதான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், அரபிகள் … Read more

பல அடுக்கு வாகன நிறுத்தம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும்- கே.என்.நேரு பதில்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எழிலரசன், பிச்சாண்டி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் எம்.சி.சாலை குறுகலாக உள்ளதால், அதற்கு அருகே உள்ள ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கு … Read more

ஐபிஎல் 2022: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து குஜராத் அணி களமிறங்க உள்ளது.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவருக்கு ஹாஸ்டல் | Dinamalar

மைசூரு : ”பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்,” என பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.மைசூரில் அவர் கூறியதாவது: மாணவர்கள் கல்வி பெறுவதற்காக, கிராமங்களிலிருந்து, நகரங்களுக்கு வருகின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு, உணவு, தங்கும் வசதியுடன் கூடிய ஹாஸ்டல் திறக்கபடும்.தற்போது மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டல் வேண்டுமென, கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதன்படி தீன் தயாள் உபாத்யாய பெயரில், … Read more

கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!!

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார். டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார். தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! ஆனால் தற்போது … Read more

டிவிட்டர் இயக்குநர் குழுவில் இணையாத எலான் மஸ்க் ; பராக் அக்ரவால் கொடுத்த விளக்கம்

ட்விட்டர் இயக்குநர் குழுவில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இணைவார் என எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், அவர் ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணையவில்லை என்பது இன்று உறுதியாகியிருக்கிறது  ட்விட்டர் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க்கின் நியமனம் குறித்து ஏப்ரல் 5 ஆம் தேதி, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில், `எலான் மஸ்க்கை எங்கள் குழுவில் நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர் … Read more

ரஷ்யா- உக்ரைன் போர்! பரபரப்பை கிளப்பிய பெண் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்…

ரஷ்ய தொலைக்காட்சியில் திடீரென தோன்றி உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை நினைவிருக்கலாம்… கடந்த மாதம், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, திடீரென, ’போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் ஒரு பெண். அவரது பெயர் Marina Ovsyannikova (43). அவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் எடிட்டர் ஆவார். நேரலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, Marina மாஸ்கோவில் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் விவகாரம் தொடர்பாக ஜேம்ஸ் பிராங்கிளினிடம் விசாரிக்க துர்ஹாம் அணி முடிவு…

அஸ்வின் ரவிச்சந்திரனுடன் “கம்பாக் டேல்ஸ்” என்ற தலைப்பில் கருண் நாயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. யுஸ்வேந்திர சாஹல் இதில் பேசிய சாஹல் 2011 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடிய போது தன்னை ஜேம்ஸ் பிராங்கிளின் மற்றும் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் இருவரும் சேர்ந்து தன்னை உடல் ரீதியாக கேலி செய்ததாகவும், பின்னர் தன்னை கை … Read more

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு- சசிகலா பேட்டி

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீதேவி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி … Read more

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது