லக்னோ மாணவருக்கு அமேசான் நிறுவனத்தில் 1.20 கோடி சம்பளத்தில் வேலை| Dinamalar

லக்னோ-லக்னோ ஐ.ஐ.ஐ.டி., மாணவருக்கு அயர்லாந்தில் உள்ள ‘அமேசான்’ நிறுவனத்தில், ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது .உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் லக்னோவில் இந்திய தகவல் தொழில்நுட்ப மையமான ஐ.ஐ.ஐ.டி., உள்ளது. இதில், பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஜித் திவிவேதியை, அமேசான் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவருக்கு ஐரோப்பிய நாடான அயர்லாந்து தலைநகர் டப்லினில், ஆண்டுக்கு, 1.20 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை … Read more

புதுச்சேரி சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம்- சபாநாயகர் செல்வம்

புதுவை சபாநாயகர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை செயலாளர் புதுவை சட்டசபை செயலாளருக்கு கடந்த 1981-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் துறை தலைவருக்கான நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கி இருந்தது. இதுநாள் வரை புதுவை சட்டசபை செயலகத்தால் அந்த ஆணை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் … Read more

சென்னை: நாய்களுக்காக கத்திக் குத்து வாங்கிய குடும்பம்! – என்ன நடந்தது?

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (43). இவர் வீட்டில் 6 நாய்களை வளர்த்து வருகிறார். கடந்த 7-ம் தேதி மதியம் ராஜலட்சுமியின் எதிர்வீட்டில் குடியிருக்கும் தனசேகர் என்பவர் `உங்கள் நாய் அடிக்கடி என்னைப் பார்த்து குரைக்கிறது’ என்று அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அந்த நாயை டியூப் லைட்டால் தாக்கியுள்ளார். அதை ராஜலட்சுமியின் மகன்கள் திவாகர், ரித்திஷ் ஆகியோர் தட்டிக் கேட்டிருக்கின்றனர். கத்தி குத்து உடனே ஆத்திரமடைந்த தனசேகர், வீட்டிலிருந்து … Read more

இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

புதுடெல்லி: இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அங்கு முதல் … Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹபீஸ் சயீது மகன் பயங்கரவாதி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘மும்பையில் ௨௦௦௮ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது மகன் ஹபீஸ் தல்ஹா சயீதை, பயங்கரவாதி என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ௨௦௦௮ நவ., ௨௬ல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் ௧௬௬ பேர் இறந்தனர்.இந்த தாக்குதலை, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், லஷ்கர் பயங்கரவாத அமைப்பை துவக்கிய ஹபீஸ் … Read more

மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயிலில் குதிரையை கொண்டு சென்ற உரிமையாளர் கைது

கொல்கத்தா,  மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் கபூர் அலி முல்லா. இவர் சொந்தமாக குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இதை கடந்த 6-ந்தேதி பந்தயம் ஒன்றுக்காக கொண்டு சென்றார். இரவில் பந்தயம் முடிந்ததும் குதிரையை வீட்டுக்கு கொண்டு செல்வது எப்படி? என யோசித்தார். அப்போது அவருக்கு விபரீத எண்ணம் தோன்றியது. அதாவது பயணிகள் ரெயிலில் தனது குதிரையையும் அழைத்து சென்றால் எப்படி? என எண்ணினார். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்தார். இதற்காக தக்‌ஷின் … Read more

கை கால்கள் கட்டப்பட்டு கிடந்த இந்திய கிரிக்கெட் வீரர்: போதையில் சகவீரர்களின் அட்டூழியம்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், 15வது மாடியில் உள்ள பால்கனியில் தொங்கியது முதல் கைகால்கள் கட்டப்பட்டு கிடந்த திகில் தருணங்களை இந்திய வீரர் அஸ்வினுடன் நடைபெற்ற நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயணத்தை தொடங்கி பின்னர் பெங்களூரு அணிக்கு மாறி தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக மாறிய யுஸ்வேந்திர சாஹல் தனது வாழ்வின் திக் திக் நிமிடங்களை அஸ்வினுடான நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் … Read more

4வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் … Read more

ஏப்ரல்-10: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.