பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹபீஸ் சயீது மகன் பயங்கரவாதி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘மும்பையில் ௨௦௦௮ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது மகன் ஹபீஸ் தல்ஹா சயீதை, பயங்கரவாதி என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ௨௦௦௮ நவ., ௨௬ல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் ௧௬௬ பேர் இறந்தனர்.இந்த தாக்குதலை, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், லஷ்கர் பயங்கரவாத அமைப்பை துவக்கிய ஹபீஸ் … Read more

மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயிலில் குதிரையை கொண்டு சென்ற உரிமையாளர் கைது

கொல்கத்தா,  மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் கபூர் அலி முல்லா. இவர் சொந்தமாக குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இதை கடந்த 6-ந்தேதி பந்தயம் ஒன்றுக்காக கொண்டு சென்றார். இரவில் பந்தயம் முடிந்ததும் குதிரையை வீட்டுக்கு கொண்டு செல்வது எப்படி? என யோசித்தார். அப்போது அவருக்கு விபரீத எண்ணம் தோன்றியது. அதாவது பயணிகள் ரெயிலில் தனது குதிரையையும் அழைத்து சென்றால் எப்படி? என எண்ணினார். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்தார். இதற்காக தக்‌ஷின் … Read more

கை கால்கள் கட்டப்பட்டு கிடந்த இந்திய கிரிக்கெட் வீரர்: போதையில் சகவீரர்களின் அட்டூழியம்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், 15வது மாடியில் உள்ள பால்கனியில் தொங்கியது முதல் கைகால்கள் கட்டப்பட்டு கிடந்த திகில் தருணங்களை இந்திய வீரர் அஸ்வினுடன் நடைபெற்ற நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயணத்தை தொடங்கி பின்னர் பெங்களூரு அணிக்கு மாறி தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக மாறிய யுஸ்வேந்திர சாஹல் தனது வாழ்வின் திக் திக் நிமிடங்களை அஸ்வினுடான நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் … Read more

4வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் … Read more

ஏப்ரல்-10: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சித்திரை விஷு பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சபரிமலை-சித்திரை விஷு பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது . சபரிமலை நடை, சித்திரை விஷு பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து மூலவருக்கு விளக்கேற்றிய பின், 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லாததால், இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை … Read more

24 பினாகா ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை

புதுடெல்லி,  பினாகா ஏவுகணை அமைப்பை புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் மற்றொரு ஆய்வகமான அதிசக்தி பொருட்கள் ஆய்வகத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. பினாகா ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக பினாகா எம்கே-1 உள்ளது. புதிய தேவைகளுக்கு ஏற்ப, அதிக தொலைவு சென்று தாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இது மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் சோதனை … Read more

தளபதியை கொடூர சிறையில் தள்ளிய ரஷ்யா: தகவல்களை கசியவிட்டதால் புடின் ஆவேசம்!

மேற்கத்திய நாடுகளுக்கு ராணுவ திட்டத்தை கசியவிட்டதாக கூறி சிறப்பு புலனாய்வு துறை ஜெனரல் செர்ஜி பெசேடாவை (68) கொடூரமான லெஃபோர்டோவோ சிறையில் ஜனாதிபதி புடின் அடைந்துள்ளார். ரஷ்யாவின் சிறப்பு புலனாய்வு படையின் 5வது பிரிவிற்கு தலைவரான ஜெனரல் செர்ஜி பெசேடா(68) மீது மேற்கத்திய நாடுகளுக்கு தகவலை கசியவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பிறகு அவரை விசாரணைக்கு முந்தைய தடுப்பு காவலில் லெஃபோர்டோவோ சிறையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அடைந்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் இந்த முடிவானது, உக்ரைனில் ஏற்பட்ட மிகப்பெரிய … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,200,944 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,200,944 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 498,327,141 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 437,504,382 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,050 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.