தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழக – வட இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, … Read more

தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு – வட இலங்கை கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உலகில் மிக உயர ஆஞ்சனேயர் சிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு| Dinamalar

துமகூரு : குனிகல், பிதனகரே பசவேஸ்வரா மடத்தில், புதிதாக கட்டப்பட்ட உலகிலேயே மிகவும் பெரிதான 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக திறந்து வைக்கிறார்.துமகூரு குனிகல்லின், பிதனகரே பசவேஸ்வரா மடத்தில் 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக, இன்று திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சிகளை, முதல்வர் … Read more

பிஎஸ்என்எல் உடன் டிசிஎஸ் கூட்டணி.. 4ஜி சேவையில் அதிரடி..!

இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவையை கொண்டு வருவதற்கான பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடந்து வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எஸ் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கானப் பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும் எனப் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ள நிலையில் முக்கியமான திட்டத்தை நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிஎஸ்என்எல் … Read more

BB Ultimate 70: வென்றாரா பாலா?! இறுதிக்கட்டம்; ஃபேர்வெல் கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் சீசன் அதன் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. சீசனின் வின்னர் யாரென்கிற தகவல்கூட தெரிந்திருக்கும். வழக்கமான சீசன்களோடு ஒப்பிடும் போது அல்டிமேட்டில் சுவாரசியம் சற்று குறைவாகத்தான் இருந்தது. இதன் போட்டியாளர்கள் அனைவருமே பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பதால் முந்தைய சீசன்களில் அம்பலமான தவறுகள் மீண்டும் நிகழாதவாறு கவனமாக பார்த்துக் கொண்டார்கள். அதுவே ஒரு செயற்கைத்தன்மையை உருவாக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. எபிசோட் 70 -ல் நடந்தது என்ன? புகைப்படங்களை பரஸ்பர சிரிப்புடன் வேடிக்கை பார்த்தது முடிந்ததும் பிரியங்காவும் பாவனியும் … Read more

என் வேலை முடிந்துவிட்டது: விராட் கோலி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர் தனது வேலை முடிந்துவிட்டதாக விராட் கோலி ட்வீட் செய்துள்ளார். ஐபிஎல்-லில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வந்த விராட் கோலி, நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார். கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

கொழும்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருக்கும் வேண்டுகோளில், நாடு ஒன்றுபட்டிருக்கும் வேளையில், தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது, நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் ஆர்ப்பாட்டம்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது இயங்கி வருகிறது. அங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவம் 2, 3, 4-ம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு நிர்ணயித்துள்ள … Read more

41 எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு

கொழும்பு: அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்த 41 எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசு அமைக்க 41 பேரும் கோரிய நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பொதுஜன பெருமுனை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் தனித்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

இன்று ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்; விரத முறை; நன்மை தரும் பாட்டு| Dinamalar

பங்குனி மாத புனர்பூச நட்சத்திரமான இன்று (ஏப்.10) ஸ்ரீராமநவமி கொண்டாடுகிறோம்.இந்நாளில் விரதமிருப்பவர்கள் காலையில் பூஜையறையில் கோலமிட்டு ராமர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து துளசி மாலை சூட்டுங்கள். விளக்கேற்றி ராம அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் ஜபியுங்கள். ‘ராம ராம ராம’ என்னும் நாமத்தையும் 108 முறை சொல்லலாம். சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர்மோர், பஞ்சாமிர்தத்தையும் படையுங்கள். கம்பர், துளசி ராமாயணத்தில் ராமர் பிறப்பை படிக்கலாம். 1008 முறை ‘ஸ்ரீராம ஜயம்’ எழுதலாம். மாலையில் கோயில் வழிபாடு … Read more