பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இமானுவேல் மேக்ரான் முன்னிலை

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தல், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் 12-வது அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் 27.42 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். ஆனால் அந்நாட்டு தேர்தல் முறைப்படி, முதல் சுற்றில் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் அதாவது 50 சதவீதம் வாக்குகள், யாரும் பெறவில்லை என்றால் இரண்டாம் கட்ட … Read more

கனமழை: நாகை, காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை : தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு … Read more

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று கல்வித்துறையின் மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள்  நடைபெறுகிறது.மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்படுகிறது.

திடீர் மழையால் வாழை மரங்கள் சேதம்| Dinamalar

திருக்கனுார் : மணலிப்பட்டு பகுதியில் சூறைக் காற்றுடன் கூடிய திடீர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.திருக்கனூர் அடுத்த மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வாழை, சவுக்கை உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.இதனால், மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. … Read more

தனியார் மையங்களுக்கு இலவச கோவிஷீல்டு தடுப்பூசி சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி,  இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் நேற்று முதல் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை தனியார் தடுப்பூசி மையங்களுக்கு விலை குறைத்து ஒரு டோஸ் ரூ.225 என்ற விலைக்கு வழங்குவதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனே இந்திய சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்நிலையில், தனியார் தடுப்பூசி மையங்களில் ஏற்கனவே இருப்பு … Read more

சிமெண்ட் விலை மீண்டும் உயரும்.. இதுதான் காரணம்..!

இந்தியாவில் அனைத்து நுகர்வோர் மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் உலோகங்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமான துறையைப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல லட்சம் கட்டுமான திட்டங்கள் மந்தமாவது மட்டும் அல்லாமல், இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எண்ணிக்கை குறையலாம். அமெரிக்காவை மிரட்டும் ரெசிஷன்.. பேங்க் ஆஃப் அமெரிக்கா எச்சரிக்கை..! சிமென்ட் விலை இந்தியாவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டுமான … Read more

சசிகலா சேலம் பயணம்… ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்! தெரிந்தேதான் செய்தாரா முதல்வர்? -கழுகார் அப்டேட்ஸ்

நிதியமைச்சர் அட்வைஸ்… ஏற்றுக்கொண்ட முதல்வர்!மானியக் கோரிக்கையில் பரிசு கிடையாது! தமிழக சட்டசபையில் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது, அந்தந்தத் துறை சார்பாக தங்கள் துறை அலுவலர்களுக்கு ஸ்பெஷல் உணவுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை அப்படி எதுவும் வழங்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. கழுகார் “நாம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவரும்போது, இது போன்ற செலவுகள் வேண்டாம்” என்ற நிதியமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்தே முதல்வர் அலுவலகம் இப்படியொரு முடிவை எடுத்ததாம்! … Read more

கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ்  அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. … Read more

முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க கூடாது: பிரகலாத் ஜோஷி

பெங்களூரு: தார்வாரில் முஸ்லிம் வியாபாரி ஒருவரை சிலர் தாக்கி அவர் விற்பனை செய்ய வைத்திருந்த தர்ப்பூசணி பழங்களை அழித்தனர். இந்த நிலையில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அமைதி-மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மற்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது என்பது வேறு விஷயம். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். மத அடிப்படைவாதிகள் பிரச்சினையை தூண்டிவிடுகிறார்கள். இதை ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்புகள் மற்றும் அரசு … Read more

அதிமுக பொதுச் செயலாளர் யார்?.. இன்று தீர்ப்பு.. எதிர்பார்ப்பில் சசிகலா

சென்னை : சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்தார்.