விரல் நகங்களே அடையாளம்… உக்ரைன் பெண் தொடர்பில் உலகை உலுக்கிய புகைப்படம்

உக்ரைன் நகரமான புச்சாவில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு இலக்கான பெண் ஒருவரை அவரது விரல் நகங்களால் அடையாளம் கண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரம் ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக சிதைக்கப்பட்ட தகவல் உலக நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், ரஷ்யா மீது போர் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்க ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புச்சா நகர தெருக்களில் சடலங்களை மட்டுமே தற்போது காண முடிவதாக கூறும் அதிகாரிகள், தீயில் மொத்தமாக கருகிய நிலையில் 50 … Read more

சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்! அமைச்சர் நிதின்கட்கரி தகவல்…

டில்லி:  சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். ராஜ்யசபாவில் சாலை விபத்து குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்து பேசினார். அப்போது,  சர்வதேச சாலை கூட்டமைப்பால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 2020ல், நம் நாட்டில், சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. உலக நாடுகளின் பட்டியலில், அதிக … Read more

டெல்லியில் பாதிப்பு 3-வது நாளாக உயர்வு: இந்தியாவில் புதிதாக 1,109 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் புதிதாக 176 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு 2 நாட்களுக்கு … Read more

திருப்புதல் தேர்வில் இடம்பெறாத பாடப்பிரிவுகளுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வில் இடம்பெறாத பாடப்பிரிவுகளுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

ரூ.2 கோடி திருட்டு கொடுத்தவரிடம் வருமான வரித்துறை கிடுக்கி| Dinamalar

குமாரசாமி லே –தொழிலதிபர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய் திருடிய இருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த தொழிலதிபரிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என வருமான வரித்துறை, அமலாக்க துறைக்கு போலீசார் புகார் செய்துள்ளனர். அவர்கள் கிடுக்கிப்பிடி விசாரணையை துவக்கியுள்ளனர்.பெங்களூரு குமாரசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சந்தீப் லால், 45. மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபரான இவர், கடந்த மாதம் 28ல் சென்னை சென்றிருந்தார்.அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் … Read more

“2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?" -அண்ணாமலையை சாடிய பிரேமலதா

நாட்டில் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசுகையில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தற்போது … Read more

முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் … Read more

தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதால் மகனை எரித்து கொன்ற தந்தை

பெங்களூரு: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திரா (வயது 53). இவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினரிடம் வசித்தார். சுரேந்திராவின் மகன் அர்பித் (25). சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்தார். இந்த நிலையில் சுரேந்திரா தான் செய்து வந்த தொழிலை அர்பித்திடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் செய்து வரும் தொழிலை கவனித்து கொள்ளும்படி சுரேந்திரா, அர்பித்திடம் கூறியுள்ளார். அப்போது அர்பித் … Read more

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016-ல் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கட்டுப்படுத்தும் என அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.