H-1B விசா; மனைவி, குழந்தைகளுக்கு பணி அனுமதி வழங்குவதற்கான மசோதா அறிவிப்பு!

தற்போது H-1B, H-2A, H-2B மற்றும் H-3 ஆகிய விசாக்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல H-4 விசா வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அங்கு பணி செய்வதற்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணமான (EAD) படிவம் I-765க்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கி அவை செயலாக்கப்படும் வரை விண்ணப்பித்தவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்துக் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்த புதிய மசோதா H-1B, H-2A, H-2B மற்றும் H-3 விசா வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் … Read more

தலைமுடியை வெட்டி தங்கள் அழகை குறைத்து காட்டும் உக்ரைன் பெண்கள்! அதிரவைக்கும் காரணம்

ரஷ்ய துருப்புகளால் சீரழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி கொண்டு அழகை குறைத்து காட்டி கொள்ள முயல்கின்றனர். கீவில் உள்ள Ivankivன் துணை மேயர் Maryna Beschastna தான் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சமீபத்தில் கூட 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளை ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து சீரழித்தனர். தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வரப்பட்ட அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையும் படிங்க: உக்ரைனில் 14 வயது சிறுமி கர்ப்பம்! … Read more

தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னையில் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரமேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐஐ கூட்டமைப்பு சார்பில்  நடைபெறும் இந்த மாநாடு 2 நாட்கள்  நடைபெற இருக்கிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான … Read more

சிறைவாசத்தில் இருந்த இறைவனுக்கே சுதந்திர காற்றை வழங்கியது தி.மு.க. அரசு- அமைச்சர் சேகர் பாபு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில், கொத்தம்புள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம், சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். அதன்படி 2009ம் … Read more

புதுச்சேரி அருகே கூனிமேடு பகுதியில் பிரபல ரவுடி அபினேஷ் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கூனிமேடு பகுதியில் பிரபல ரவுடி அபினேஷ் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுவர்கள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அபினேஷ் கொலைசெய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கோவிட் பரவி வருவதால் 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது. சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 ஐ தொட்டது.கேரளா, மிசோரம், மஹாராஷ்ட்டிரா, புதுடில்லி, ஹரியானா மாநிலங்களில் புதிய கோவிட் வேகமெடுத்துள்ளது. இந்த 5 … Read more

உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார்: `கணவரை பழிவாங்க இப்படி செய்றாங்க’ – கர்ப்பிணி மனைவி கண்ணீர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு பயிலக்கூடிய மாணவி ஒருவர் சமீபத்தில், தனது துறை உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தன்னை சாதி பெயரைக்கூறி திட்டியதாகவும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ஆசிரியரின் மனைவி இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பிரேம் குமாரின் மனைவி கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர், … Read more

சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது. இதற்கு காரணமாக தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை தான். சர்க்கரை வியாதி முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு இருப்பார்கள். மருந்தை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரை வியாதி தலைதூக்க ஆரம்பித்து விடும். எனவே அந்த மருந்தை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருகிறார்கள் பலரும். அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக … Read more

பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும்! யுஜிசி உத்தரவு

டெல்லி: பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கபட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும்  பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணாக்கர்களுக்கு  பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவதும் காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு … Read more

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

சென்னை: அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன. இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக … Read more