பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது இன்று வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் எம்.கியூ.எம். விலகியதை அடுத்து ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. அத்துடன், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தாலும் அவர் தோல்வி அடைவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. … Read more

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது

சென்னை :சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது. ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது.

ஒரே வாரத்தில் 65 பேர் பாதிப்பு கர்நாடகாவில் அதிகரிக்கும் டெங்கு| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவில், டெங்கு காய்ச்சல் ஏறுமுகமாக உள்ளது. ஒரே வாரத்தில் 65 பேருக்கு, டெங்கு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் கொரோனா தொற்று குறைந்தது என மக்கள் நிம்மதியடைந்த நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஒரே வாரத்தில் 65 பேருக்கு இக்காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நடப்பாண்டு இதுவரை மைசூரில் 93 பேர், உடுப்பியில் 75, சித்ரதுர்கா, பல்லாரியில் 68, கொப்பாலில் 65, ஷிவமொகாவில் 43, விஜயபுராவில் 37, கோலாரில் 33 உட்பட, பல்வேறு … Read more

தாம்பத்ய உறவில் ஈடுபட பரோல் கோரி மனைவி மனு – ஆயுள் தண்டனை கைதிக்கு பரோல் வழங்கிய ஐகோர்ட்டு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இதற்கிடையில், கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் நந்தலாலின் மனைவி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, சிறையில் உள்ள ஆயுள் … Read more

ரஷ்ய கிராமங்களில் இருந்து உக்ரைனுக்குள் வரும் “walking dead” படை: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா அதன் கிராமங்களில் இருந்து “walking dead” எனப்படும் புதிய தன்னார்வ படைகளை அனுப்பிவைத்துள்ளது. உக்ரைன் மீதான போரில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு மாற்றங்களை ரஷ்யா அடுத்தடுத்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது சிரிய போரில் தலைமை தாங்கிய அனுபவம் உள்ள தளபதியான ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவ்-வை ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு ராணுவ தாக்குதலுக்கு படை தளபதியாக நியமித்தார். A new unit of “walking dead” … Read more

‘தங்க மனசு கொண்ட சிங்கம்’… தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவுர் ரம் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஒரே நேரத்தில் ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களில் கேப்பே இல்லாமல் நடித்து வரும் தனுஷ் மூன்றாவதாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங்கும் பேசி வருகிறார். இந்த நிலையில், யோகி … Read more

ஏப்-09: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

புதுடெல்லி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் … Read more