ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டணம் மூலம் பூஸ்டர் தடுப்பூசி! மத்தியஅரசு

டெல்லி: ஏப்ரல் 10ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது முன்னணி ஊழியர்களாக இல்லாவிட்டால், அவர்களின் கோவிட் பூஸ்டர் ஷாட்க்கு பணம் செலுத்த வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களை தனியார் மையங்கள், மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 … Read more

ஷுப்மான் கில், ரஷித் கான் அபாரம் – பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜிதேஷ் சர்மா அதிரடியாக … Read more

இந்தி குறித்த அமித்ஷா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது: திருமாவளவன்

சென்னை: இந்தி குறித்த அமித்ஷா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன்  நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார். அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் … Read more

விவாதங்களை ஏற்படுத்தாதீர்: ரமேஷ்குமார் கெஞ்சல்| Dinamalar

கோலார்-”நானும் மாம்பழ விவசாயி தான். குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கக் கூடாது என இங்கு எந்த விவாதமும் இல்லை; இது ஊடகங்களின் கற்பனை. இத்தகைய விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம் என கை கூப்பி கேட்கிறேன்,” என முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.கோலாரில் அவர் நேற்று கூறியதாவது:விவசாயிகள் புதிதாக நிலத்தில் மாம்பழம் விளைவிக்கவில்லை. விவசாயிகள் அன்யோன்யமாக உள்ளனர். எந்த பிரச்னையும் இல்லை. சமுதாயத்தில் ஊடகத்தினருக்கும் பொறுப்புள்ளது. தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம்.நானும் கூட மாம்பழ விவசாயி தான். எனக்கு யார் … Read more

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஹிட் பங்கு.. நல்ல ஏற்றம் காணலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பங்கு சந்தை முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கினை வைத்திருக்கிறார் என்றாலே அது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்கு என பல டிரேடர்களும் நிணைப்பதுண்டு. இவரின் போர்ட்போலியோ பங்கினை தொடர்பவர்களும் சந்தையில் ஏராளம். அதிலும் அது டாடா குழும பங்கு எனும் போது வேண்டாம் என்று கூறி விட முடியுமா என்ன? இன்றும் பலரின் போர்ட்போலியோ முதலீடுகளிலும் இருக்கும், பங்குகளில் ஒன்று டாடா குழுமத்தினை சேர்ந்த பங்குகள். இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் … Read more

வலது காலுக்குப் பதில் இடதுகாலில் ஆபரேஷன்; பணியிடமாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்! – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவர் கணவர் மணிமுருககுமார் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இரண்டு மகன்கள் இருந்த போதிலும், 67 வயதானக் குருவம்மாள் தனியாகவே வசித்து வருகிறார். கல்குவாரியில் வேலைப் பார்த்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தன் வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டியிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். குருவம்மாள் அவரைப் பரிசோதனை செய்த … Read more

உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது! ரஷ்யா ஒப்புதல்

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ்  ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்ரேல் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள தாக்குதல் 44 நாட்களாக தொடர்கிறது. பல நகரங்களை ரஷ்யா படைகள் குண்டுவீசி அழித்து வந்தாலும், முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையே தொடர்கிறது. ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் ஆவேசம் அடைந்துள்ள ரஷிய படையினர் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். சமீபத்தில் புச்சா நகரில் 400-க்கும் … Read more

10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை:  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடக்க உள்ளது.  இந்த பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அத்தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வு எழுத அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் … Read more

ஒன்றிய அரசு விலைவாசி பிரச்சனையை திசை திருப்பவே இந்தி திணிப்பை கையில் எடுத்திருக்கிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: ஒன்றிய அரசு விலைவாசி பிரச்சனையை திசை திருப்பவே இந்தி திணிப்பை கையில் எடுத்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார். இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை என்றும் அனுமதிக்காது எனவும் கூறினார்.