21 பந்தில் அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் – குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி களமிறங்கியது. பஞ்சாப் கேப்டன் வழங்கம் போல உடனே (5)பெவிலியன் திரும்பினார். அடுத்த புதிதாக பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோவ் களமிறங்கினார். அவரும் ஜொலிக்கவில்லை 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் தவான் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 ரன்கள் எடுத்த நிலையில் தவான் வெளியேறினார். ஒரு பக்கம் … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: காவல்துறையை விமர்சித்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2014-ல் திண்டுக்கல்லில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல்துறையை ஐ.பெரியசாமி விமர்சித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அமைச்சராகும் ஆசை உள்ளது: எம்.எல்.ஏ., பெல்லத் அறிவிப்பு!| Dinamalar

ஹூப்பள்ளி-”எனக்கும் அமைச்சராக வேண்டுமென்ற ஆசை உள்ளது. நானும் பதவியை எதிர்பார்க்கிறேன்,” என பா.ஜ., – எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் தெரிவித்தார்.ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:அமைச்சரவையில் மூத்தவர்கள் மட்டும் இருந்தால் போதாது. இளைஞர்களும் இருக்க வேண்டும்.அமைச்சராக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் உள்ளது. எனக்கு மட்டுமல்ல, மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும் இருக்கும். பா.ஜ., மேலிடம், தன் முடிவுபடி அமைச்சர் பதவி வழங்கும்.அரசியல் என்றால், டில்லி வரை ‘லாபி’ நடப்பது சகஜம். நான் அமைச்சர் பதவி கேட்டு, டில்லிக்கு செல்லவில்லை. வேறு விஷயமாக … Read more

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு BMW கார் பரிசு.. சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் அதிரடி..!

சென்னையிலுள்ள செயல்படும் ஐடி நிறுவனம் kissflow, 10 ஆண்டுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில், சிறப்பாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபள்யூ காரினை பரிசாக அளித்துள்ளது. கிஸ்ஃப்ளோவின் இந்த பரிசானது மழை, வெயில், வெள்ளம் என பாரபட்சம் இல்லாமல் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிறுவனம் நெருக்கடியான நிலையில் இருந்த போதும் கூட, ஊழியர்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியோருக்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த சிறிய பரிசினை … Read more

குடும்பத் தகராறு: கணவனைத் தம்பியோடு சேர்ந்து கொன்ற மனைவி – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் குட்டி மாடசாமி. இவர் மீது, விருதுநகர் மாவட்ட காவல்நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி, சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கம் கொண்ட குட்டிமாடசாமி, போதையில் தன் மனைவி சுப்புலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதேபோல் அவர், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. … Read more

இவர்களெல்லாம் நாட்டிற்குள் நுழைய தடை! பிரித்தானியா அதிரடி

ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lavrov ஆகியோரின் குடும்பத்தினர் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் புடினின் இரண்டு … Read more

08/04/2022: தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 32 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,53,033 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்  10 பேருக்கு கொரோனா தொற்று … Read more

அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  இந்தநிலையில் , அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளாதவது: – இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை … Read more

கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

கிண்டி: கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பழைய பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கவயல் செக்போஸ்ட்| Dinamalar

ஆபிசரே நேரடியாக அதிரடி சோதனை! திரவ பெட்ரோலிய எரிவாயு எனப்படும், எல்.பி.ஜி., காஸ் பாதுகாப்பு இல்லாமல் ஆட்டோ, கார்களுக்கு கடைகளில், வீடுகளில் சிலர் சட்ட விரோதமாக ‘ரீபில்லிங்’ செய்றாங்கன்னு பலருக்கும் தெரியாது.கள்ளச்சாராயம் காய்ச்சிய போது மாமூல் வசூல் வேட்டை நடத்தி வந்தவர்கள் போல, சிலர், காஸ் ரீபில்லிங் செய்கிறவர்கள் எங்கே; யார் செய்றாங்கன்னு தெரிந்து, அவர்களிடம் மாமூல் வசூலித்து வராங்க. ஏன்னா சட்டம் அவங்க கையில் என ஜனங்க நம்புறாங்க. இவங்க தைரியத்தில் தான் சட்டவிரோதமா இது … Read more