கனேடிய கடல் உணவு ஒன்றின் மூலம் பரவும் வைரஸ்: அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிப்பி உணவு ஒன்றின் மூலம் வைரஸ் ஒன்று பரவுவது தெரியவந்துள்ளதால், அதை உண்ணவேண்டாம் என கனேடிய அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஜனவரி 31 வாக்கில் சேகரிக்கப்பட்ட Oysters என்னும் சிப்பி உணவில், norovirus என்னும் வைரஸ் இருப்பதும், அது அமெரிக்காவில் பல இடங்களில் நோய்த்தொற்றை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது. கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த சிப்பிகள் அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த norovirus பொதுவாக உயிருக்கு … Read more

ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாரத ரக்ஷனா எனும் இந்து அமைப்பைச் சேர்ந்த பிரசாந்த் பங்கேரா என்பவர் கோவில்கள் மற்றும் புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்கள் இஸ்லாமியர்களை ஓட்டுநர்களாக உள்ள வாகனங்களில் செல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அனைத்து இந்துக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ஸ்ரீ ராம் சேனா என்ற மற்றொரு இந்து அமைப்பு இதற்கு … Read more

கூட்டுறவுத்துறை மோசடியை விசாரிக்க தனி சிறப்பு கோர்ட்டு- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். அவர் கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களான தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் தர்மசாலைகளாக விளங்கிய அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார். அப்போது சுகாதாரத்துறை … Read more

செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஏப். 27 முதல் 29 ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெறும் 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 14ல் நடக்கிறது கரக உற்சவம்| Dinamalar

பெங்களூரு-கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக சாதாரணமாக கொண்டாடப்பட்ட, வரலாற்று பிரசித்தி பெற்ற பெங்களூரு கரக உற்சவம், இம்முறை ஆடம்பரமாக கொண்டாடப்படவுள்ளது. வழக்கம் போல் கரகம், மஸ்தான் சாப் தர்காவுக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு கரக உற்சவம், பல நுாற்றாண்டு வரலாறு கொண்டதாகும். ஆண்டு தோறும் ஏப்ரலில், கரக உற்சவம் நடப்பது வழக்கம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இரண்டு ஆண்டுகளாக, கொரோனா முட்டுக்கட்டை போட்டது; எளிமையாக நடந்தது. கோவிலில் சம்பிரதாப்படி பூஜைகள் நடந்தன.தற்போது தொற்று குறைந்துள்ளதால், இம்முறை பெங்களூரு கரக உற்சவம் … Read more

அமேசான் கோட்டைக்குள் நுழையும் பிளிப்கார்ட்.. 70 பில்லியன் டாலர் கனவு நிறைவேறுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மத்தியில் ஏற்கனவே கடுமையான போட்டி இருக்கும் நிலையில், தற்போது அமேசானின் கோட்டைக்குள் பிளிப்கார்ட் நுழைய உள்ளது. பிளிப்கார்ட் இந்தியாவில் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப்போட முடியாத காரணத்தால் தனது வர்த்தகத்தை மொத்தமாக அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட்-க்கு விற்பனை செய்து இயங்கி வரும் நிலையில், தற்போது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முதலீட்டைத் திரட்டும் விதமாகப் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பிளிப்கார்ட் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிளிப்கார்ட் இந்தியாவில் … Read more

KGF 2: `சலாம் ராக்கி பாய்' – யாஷ் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!

KGF 2 யாஷ், ஶ்ரீநிதி செட்டி KGF 2 யாஷ், ஶ்ரீநிதி செட்டி KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் KGF 2 யாஷ் … Read more

மின்கம்பியில் உராய்ந்தபடி நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்: கமெராவில் சிக்கிய காட்சி

அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று மின்கம்பியில் உராய்ந்தபடி நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது. ஜார்ஜியாவிலுள்ள Kennesaw என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த Natasha Williams என்னும் பெண்ணின் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் சிக்கிய அந்த காட்சியில், அந்த விமானம் மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாகுவதையும், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த சிறிய ரக விமானம் சாலையில் வந்து மோதுவதையும் காணலாம். இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், அந்த விமானத்தை … Read more

இந்திய மக்களை மொழிரீதியாக பிளவுபடுத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! கே.எஸ்.அழகிரி,

சென்னை: நாநாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். இந்திய மக்களை மொழிரீதியாக பிளவபுடுத்துகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது என காங்கிரஸ் மாநில தலைவர் … Read more

சொத்து வரி உயர்வை கண்டித்து சென்னையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழக பா.ஜனதா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் மாநில துணை தலைவர்கள் வி.பி. துரைசாமி, சக்கரவர்த்தி, முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், … Read more