கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைப்பு| Dinamalar

புதுடில்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி விலையை குறைக்க அதனை தயாரிக்கும் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசிவிலையை ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அடார் பூனாவாலா கூறியுள்ளார். அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்படுவதாக, … Read more

கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை.. சாமானியர்கள் பெரும் கவலை..!

ஆபரணத் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விருப்பமான உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கம், மக்களின் வாழ்வில், அவர்களின் உணர்வில் கலந்த ஒரு முதலீடாக இருந்து வருகின்றது. தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! இது சிறந்த முதலீடு மட்டும் அல்ல, அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாகவும் உள்ளது. இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவும் என்பதாலேயே … Read more

விழுப்புரம்: இரு கொலை வழக்குகளில் தொடர்புடைய அபினேஷ் கொடூரக் கொலை! – போலீஸ் தீவிர விசாரணை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமமான நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் அபினேஷ். 23 வயதே ஆன இந்த இளைஞர், தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்களை கட்டாயப்படுத்தி 2019, 2020ம் ஆண்டுகளில் ஓரினச்சேர்க்கை செய்து, கொலை செய்து புதைத்த வழக்கில் தொடர்புடையவர். இந்த கொடூர கொலை சம்பவங்கள், அந்த சமயங்களில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. கொலை -அபினேஷ் இந்த கொலை வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அபினேஷ், அண்மையில் பிணையில் … Read more

உக்ரைன் ரயில் நிலைய கொடூர தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷ்ய தளபதி இவர் தான்

உலக மக்களை நடுங்க வைத்த உக்ரைன் ரயில் நிலைய தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷ்ய தளபதியின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உக்ரைன் தரப்பு வெளியிட்டுள்ளது. முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் திரண்டிருந்த ரயில் நிலையம் மீது ரஷ்ய துருப்புகள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. குறித்த கொடூர தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 300கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு கேப்டன் ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் உத்தரவிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், அப்பாவி … Read more

சங்கரா மீன் கண்ணழகி சரண்யா ரவிச்சந்திரன்!

காந்த கண்ணழகி சரண்யா ரவிச்சந்திரன்! கருப்பாக கருமை நிறமென்றாலே, இளக்காரமாக பார்க்கும் உலகில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றிருப்பவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். காதலும் கடந்து போகும், வட சென்னை, இறைவி, என பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல குறும்படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் பெரியதிரை படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அவர், “மிகப்பெரிய இயக்குநர் மறைந்த பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்தில் கருப்பு நிற நாயகிகள்தான் நடித்து புகழ் பெற்றார்கள். … Read more

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்டின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. சென்னை அணி வீரர்கள் ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(கேட்ச்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி(வ), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி ஐதராபாத் அணி வீரர்கள் அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(c), ராகுல் … Read more

தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது எனதமிழக  சுகாதாரத்துறை கூறியுள்ளது. சில மாவட்டங்களில் முதல்தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைத்திட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

9 பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகா அரசையே திணறடிக்கும் வகையில், பெங்களூரின் ஒன்பது தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ – மெயிலில் மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் வந்த மிரட்டலால் மொத்த போலீசும் அதிர்ந்து போயினர். இறுதியில் வெறும் புரளி என்பது தெரிய வந்ததால், நிம்மதி பெருமூச்சு விட்டனர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ‘பெங்களூரில் நேற்று மஹாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளியில் பயங்கர வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், … Read more

2 வருடத்தில் 1725% வருமானம்.. ரூ.36 டூ ரூ.650.. மல்டிபேக்கர் பங்கு கொடுத்த வாய்ப்பு.. உங்களுக்கு?

கொரோனாவின் முதல் கட்ட அலையின்போது கடந்த 2020ன் தொடக்கத்தில் இந்திய சந்தையானது பலத்த சரிவினை கண்டது. எனினும் மீண்டும் மார்ச் கடைசியில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது. இந்த காலக்கட்டத்தில் பல மல்டிபேக்கர் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு லாபத்தினை வாரி வழங்கின. கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் 190க்கும் அதிகமான பங்குகள் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் மட்டும் 90 பங்குகள் நல்ல ஏற்றம் … Read more

“ இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது" – ஓ.பன்னீர் செல்வம்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனப் பேசியது விவாதமானது. ஹிந்தி இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி … Read more