ஹஜ் பயணிகள் புறப்பாடு தலமாக சென்னையை அறிவிக்கக் கோரிய வழக்கு! ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 விமானங்கள் புறப்பாடு தலங்களாக இருந்து வந்தது. பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் அவை 10ஆக குறைக்கப்பட்டது. இதில் சென்னையும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் … Read more