Dr.அம்பேத்கர் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ல் அவரது சிலைக்கு டிடிவி தினகரன் மரியாதை..!!

சென்னை: இந்திய அரசியல் சாசன சிற்பி, சட்டமேதை டாக்டர் B.R.அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஏப்ரல் 14-ல் கொண்டாடப்படுகிறது. Dr.அம்பேத்கர் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ல் அவரது சிலைக்கு டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார். ஏப்ரல் 14-ம் தேதி காலை 10 மணியளவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.    

சென்னைக்கு வந்த அடுத்த அமெரிக்க நிறுவனம்.. கேபிடஸ்..!

சென்னையில் கடந்த சில மாதத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது அலுவலகத்தைத் துவங்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கேபிடஸ் என்னும் நிறுவனம் சென்னையில் முதல் இந்திய அலுவலகத்தைத் துவங்கியுள்ளது. கேபிடஸ் அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நிதியுதவி வழங்கும் முன்னணி நிறுவனமான கேபிடஸ், இன்று சென்னையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது மூலம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளையும் … Read more

ஆந்திரா: மாற்றம்… விரிவாக்கம்… அமைச்சரவையைக் கலைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி!

கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150-தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது, ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை மூன்று ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். சமீபத்தில், டெல்லி சென்ற முதல்வர் ஜெகன் மோகன் … Read more

தாய் நாட்டிற்கு துரோகமிழைத்து.. குடும்பத்துடன் ரஷ்யா தப்பியோடிய உக்ரைன் மேயர்!

உக்ரைன் நகர மேயர் ஒருவர் தாய் நாட்டிற்கு துரோகமிழைத்து குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பியோடியதாக கார்கிவ் கவர்னர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேசமயம், உக்ரைனின் மரியுபோல் உட்பட பல பகுதிகளிலிருந்து உக்ரேனியர்களை வெளியேற்றிய ரஷ்ய படைகள், அவர்களை ரஷ்ய நகரங்களுக்கு நாடு கடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் Balakliia மேயர் Ivan Stolbovyi குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பியோடியுள்ளதாக கார்கிவ் கவர்னர் … Read more

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்! விரைவில் அறிமுகம்

டெல்லி: வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவதில் முன்னணியில் உள்ளது கூகுள்மேப். நகர்ப்புறங்களில் இன்று பெரும்பாலோர் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதாக செல்ல கூகுள் மேப் பெரிதும் உதவிக்கமாக திகழ்கிறது. இந்த கூகுள் மெப் செயலில் புதிய அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. இதன்மூலம் நாம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, அடுத்து எந்த இடத்தில் டோல் வருகிறது, அங்கு வசூலிக்கப்பட உள்ள கட்டணம் எவ்வளவு என்பதுவரை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. டிஜிட்டலின் அசூர வேக வளர்ச்சி இன்று … Read more

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு – தேசிய தேர்வு முகமை

சென்னை: 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.  இந்த தேர்வுக்கு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7-ந் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேதனையில் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் பற்றி முதல்வர் தனது கவலையை தெரிவித்துக் கொண்டார். இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப தயார் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

வாலிபர் கொலை விவகாரம் அமைச்சர் கருத்து வாபஸ் | Dinamalar

பெங்களூரு : ‘உருது பேசாததால் தான் தலித் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா முதலில் கூறிவிட்டு, பின் அதை வாபஸ் பெற்றார்.வாலிபர் கொலை குறித்து நேற்று காலையில் உள்துறை அமைச்சர் கூறியதாவது:ஜே.ஜே., நகரை சேர்ந்த சந்துரு, 22 என்பவரின் கொலை குறித்து தகவல்களை கேட்டு பெற்றுள்ளேன். கொலை நடந்த அன்று சந்துருவை கொலையாளிகள் உருது பேசுமாறு கூறி உள்ளனர். அதற்கு அவர் எனக்கு கன்னடம் தவிர்த்து வேறு எந்த மொழியும் தெரியாது … Read more

பாகிஸ்தான் எடுத்த முடிவு.. மக்கள் சோகம்..!

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியிலும், பொருளாதார சரிவில் உள்ளது. இதற்கிடையில் இரு நாடுகளிலும் அரசு நிலையற்ற தன்மையில் உள்ளது மிகவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி இன்று தனது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் நாட்டின் வட்டி உயர்வு முடிவு வெள்ளிக்கிழமை நாணய கொள்கை முடிவுகளை வெளியிடக் காத்திருக்கும் ஆர்பிஐ முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் … Read more