வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்! தலைமைச்செயலாளர் இறையன்பு

சென்னை: விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய், நீா்த்தேக்கங்களில் இருந்து தூா்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் களிமண்ணை விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் பொது மக்களும் கட்டணமின்றி மாவட்ட ஆட்சியா் ஒப்புதலுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி ஏற்கனவே  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வி.இறையன்பு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  … Read more

அனைத்து மாநகராட்சிகளிலும் 11-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் போராட்டம்: பிரேமலதா

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரசினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசியை திரும்பப் பெறவேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் அனைவரின் கருத்தும் நீட் வேண்டாம் என்பதுதான். ஆளுநரிடம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க … Read more

காஞ்சிபுரத்தில் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு பெண் வியாபாரியை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு பெண் வியாபாரியை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் வளையல்கடை வியாபாரி சித்ராவை அதிமுகவின் திலகவதி தாக்கினார்.

புதுச்சேரிக்கான நிதி உதவி ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்| Dinamalar

புதுச்சேரி : ஜி.எஸ்.டி., இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசின் உதவியை ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சரிடம், கவர்னர் வலியுறுத்தி உள்ளார். டில்லி சென்றுள்ள கவர்னர் தமிழிசை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு 2022- 23ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், ‘மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதி உதவி’ திட்டத்தை அறிவித்துள்ளது,புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்ட வரம்பிற்குள் … Read more

இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வு..!

கொரோனா தொற்றில் இருந்து தட்டுத்தடுமாறி மெல்ல மெல்ல இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மீண்டு வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பணவீக்கத்தின் உயர்வால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் தொடர்ந்து 110 டாலருக்கு மேல் இருக்கும் காரணத்தால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மோசமான நிலைக்குத் … Read more

IPL 2022: `அவன் பேட்ட வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாகிடுச்சு!'- சலாம் கம்மின்ஸ் பாய்!

‘டேய்… அவன் எப்டி போட்டாலும் அடிக்கிறாண்டா’ என்ற வசனத்திற்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல்லின் ஒவ்வொரு சீசனிலுமே நம்பவே முடியாத ஒரு முரட்டுத்தனமான இன்னிங்ஸை எதோ ஒரு வீரர் ஆடிவிடுவார். இந்த சீசனின் தொடக்கத்திலேயே அப்படியொரு ஆட்டத்தை பேட் கம்மின்ஸ் ஆடியிருக்கிறார். மும்பைக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் 56 ரன்களை அடித்திருக்கிறார். இதில், ஹைலைட்டாக அமைந்தது டேனியல் சாம்ஸின் ஒரே ஓவரில் பேட் கம்மின்ஸ் அடித்த அந்த 35 ரன்கள்தான். பேட் கம்மின்ஸ் பேட் வீசிய வேகத்தில் … Read more

பள்ளி ஆசிரியை கணவருடன் சேர்ந்து கைது! சிறுமி கொடுத்த புகாரில் அதிர்ச்சி தகவல் அம்பலம்

கனடாவில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரின் கணவர் பாலியல் தாக்குதல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டாவாவை சேர்ந்த தம்பதி ஆண்ட்ரியா ஆண்ட்ரில் (37) மற்றும் ஹாரி ஆண்ட்ரில் (38). ஆண்ட்ரியா பள்ளிக்கூடம் ஒன்றில் 2017ல் இருந்து 2021 வரையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுமி மற்றும் சிறுவனிடம் ஆண்ட்ரியா மற்றும் ஹாரி தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து இருவரையும் பொலிசார் … Read more

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய கேரள வழக்கறிஞர் நெடும்பாரா என்பவரை நீதிமன்றத்தைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில், தமிழ்நாடு கேரளம் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவையும் கேரளா மதிப்பதில்லை. மேலும் தமிழக அரசுஅதிகாரிகள் அணையை ஆய்வு சென்றால், அவர்களையும் … Read more

தமிழகத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பைக் கண்காணிப்பது, தேவைக்கேற்ப அவற்றை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெற முடியவில்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது ஆகியவை மாநில அரசின் இன்றியமையாத கடமையாகும். ஆனால், இந்த பொறுப்பை உணராமல், வெற்றி என்றால் அதற்கு தி.மு.க.தான் காரணம் என்றும், பிரச்சினை … Read more

159 சென்னை பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரூ.5.47 கோடி செலவில் 159 சென்னை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்தார்.