பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு க்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பாட அளவு கணிசமாக குறைக்கப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம் என்ற விகிதத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டன. இதன் … Read more

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அல்கொய்தா தலைவருக்கு ஹிஜாப் மாணவியின் தந்தை குட்டு| Dinamalar

பெங்களூரு : கல்லுாரியில் ‘அல்லாஹு அக்பர்’ என கோஷமிட்ட மாணவியை புகழ்ந்து, சர்வதேச பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் அம்மான் அல் ஜவாஹிரி ‘வீடியோ’ வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மாணவியின் தந்தை, ‛இங்குள்ள ஹிந்துக்களும், நாங்களும், சகோதரர்கள் போல வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாருடைய ஆதரவும் வேண்டாம்’ எனக் கூறியுள்ளார். கர்நாடகாவில் பிப்ரவரியில் முஸ்லிம் பெண்கள் தலை மற்றும் முகத்தை மூடி அணியும் உடையான ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்தது. பிப்ரவரி 8ல் மாண்டியாவில் … Read more

புதின் மகள்கள் மீது புதிய தடை விதித்த அமெரிக்கா.. என்ன காரணம்..?

உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா – அமெரிக்கா மத்தியில் கடுமையான வர்த்தகப் பாதிப்புகளும், தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தற்போது புதின் வாரிசுகள் மீதும், ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகள் மீதும் புதிதாகத் தடை விதித்துள்ளது. உக்ரைன் மக்கள் உயிரிழப்பு உக்ரைன் மீதான போரின் மூலம் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றதை கண்டித்துத் தற்போது அமெரிக்கா மற்றும் … Read more

அமெரிக்காவுக்கு போறீங்களா? – `ஆம்' எனில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்!

அமெரிக்கா தன் நாட்டுக்குள் வருபவர்களை பல கட்ட ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கும். இத்தனை தடைகளைக் கடந்து அங்கு செல்பவர்களுக்கு சுய-உள்நுழைவு தானியங்கி முறையில் கேள்விகள் கேட்கப்பட்டு அனுமதிக்கப்படுவர். பாதுகாப்புக்கு பெரும்பாலும் எல்லோரின் தரவுகளையும் சேகரிக்கும் தானியங்கி உள்நுழைவு கருவிகள், அமெரிக்கவின் விமானத்தளங்களில் பொருத்தப்பட்டிருக்கும். அப்படியான சுய உள் நுழைவுக் கருவி ஒன்றில் கேட்கப்படும் கேள்வி சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அந்தக் கேள்வி இதுதான். “Are You A Terrorist” என்று கணினி திரையில் தெரியும் … Read more

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை – மாஸ்க் அணிவது நல்லது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை  என்று கூறியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுஇடங்களில் மக்கள்  மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தி உள்ளார். மும்பையில் எக்ஸ்இ என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதிவேகமாக பரவும் இந்த கொரோனா இந்தியா முழுவதும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால், மத்தியஅரசு, அது தவறான தகவல், அதுபோல ஒரு கொரோனா இந்தியாவில் பரவவில்லை என்று … Read more

சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் 11-ம் தேதி ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி 11ம் தேதி தமாகா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.     

கியூட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு| Dinamalar

புதுடில்லி : ‘நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், ‘கியூட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடப்பாண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்’ என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.மருத்துவப் படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது போல, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலை.,களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர, ‘கியூட்’ எனப்படும் பல்கலை.,களுக்கான பொது நுழைவுத் தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இது குறித்து, அனைத்து மத்திய பல்கலை.,களின் துணை வேந்தர்களுக்கு யு.ஜி.சி., எனப்படும் பல்லை., மானிய குழுவின் … Read more

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்… தமிழக அரசின் அழுத்தம் காரணமா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் மக்களவையில் இது குறித்துப் பேசிய டி.ஆர்.பாலு `நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும். மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கியப் பணி’ என்றார். நாடாளுமன்றத்தில் ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் … Read more

சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஆடையில்லாத பெண்கள் உடல்கள்! டாட்டூவை தேடிய ரஷ்யர்கள்… ஆதார புகைப்படங்கள்

உக்ரைனில் எந்த அளவுக்கு ரஷ்ய படையினர் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை காட்டும் அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 43 நாட்களாக போர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. லிசியா வலிலெங்கோ அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அந்த வகையில் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள புறநகர் … Read more