தலைப்பு செய்திகள்
இந்தியா பாக். எல்லை பகுதிகளில் ராணுவம் குவிப்பு! பாகிஸ்தானில் பதற்றம்
டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான்மீத தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பீதியில்உள்ளனர். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு … Read more
'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' – வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
கர்நாடகாவில் ஹூப்பள்ளி – ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக்கும் பயணிகள் சீட்டில் டிரைவர் தொழுகை செய்கிறார். பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே சில பேருந்துகள், மற்ற வாகனங்கள் போய்கொண்டிருப்பது தெரிகிறது. அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோ, டிரைவருக்காகக் காத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவைப் பயணி ஒருவர்தான் எடுத்துள்ளார். கர்நாடகா பஸ் டிரைவர் … Read more
சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை (SECC – எஸ்இசிசி) நடத்த முடிவு செய்தது. மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதால் வகுப்பு மாறுதல் மற்றும் ஓபிசி-எஸ்சி பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் பி. … Read more
Vijay: த.வெ.க தலைவர் விஜய் மதுரையில் ரோட் ஷோ | Photo Album
விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ Source link
பாகிஸ்தான் மீது இந்திய விவசாயிகள் சர்ஜிக்கல் தாக்குதல்… தக்காளி ஏற்றுமதியை நிறுத்தியதால் சட்னி இல்லாமல் ரத்த கொதிப்பு…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் விநியோகத்தைத் தடுப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் இரு … Read more
தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் – புதுச்சேரியில் அதிர்ச்சி
புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல் … Read more
1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்
அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும் நாட்டின் நீதி அமைப்பில் உள்ள சில உள்ளார்ந்த தாமதங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 1956 மே 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அமலாக்கத்துறை தனது 69 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் நவீன் இவ்வாறு பேசினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் … Read more
"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" – புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்
ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவிகளுக்காக இந்தியா வந்தவர்களும், திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கு வந்தவர்களும் மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவுக்குத் திருமணம் செய்து கொண்டு வந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான் … Read more
வரும் 7 ஆம் தேதி சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை வரும் 7 ஆம் தேதி சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும், மக்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் … Read more