மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழக்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழக்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசு உதவி பெரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு கோரியும், சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது.

விஜய் சேகர் ஷர்மாவின் கருத்து எடுபடுமா.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் அதிகரிக்குமா?

பேடிஎம் பங்கு, முதலீட்டாளர்களின் பணத்தில் பெரும்பகுதியை அழித்த பங்குகளில் ஒன்று. இந்த பங்கினில் போட்ட பணமாவது மிஞ்சுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா, அதன் முதலீட்டாளார்களுக்கு பேடிஎம் நிறுவனத்தினை, வெற்றிகரமான மற்றும் லாபகரமான நிறுவனத்தை உருவாக்குவேன் என உறுதியளித்துள்ளார். பேடிஎம் கேஷ்பேக்கினால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.. சேவையால் அல்ல.. ஆதித்யா பூரி நறுக் கேள்வி! காத்திருக்கலாம் எனினும் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் … Read more

“பழி வாங்குவதற்கான ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படுகின்றன!" – ராமதாஸ் ஆதங்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரு பல்கலைக்கழகம் அதன் தகுதிகளிலிருந்து கீழிறங்கிப் பழிவாங்கும் கூடமாக மாறுவதும், அதற்காக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உயர் கல்வியின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.  … Read more

புடினின் குழந்தைகள் மீது பொருளாதார தடை! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புடினின் குழந்தைகள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது, மேலும் ரஷ்ய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. புடின்-அவரது முன்னாள் மனைவி Lyudmila Putina ஜோடிக்கு Mariya Putina, Yekaterina Putina என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபரின் பல சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் … Read more

கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழகஅரசு அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 3.71 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளது. `கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகள் நடந்துவந்த நிலையில், கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாராக … Read more

பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு கூடாது. CUET நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு : தேசிய தேர்வு முகமை| Dinamalar

புதுடில்லி:நீட்தேர்வு எழுதும் நேரத்தை அதிகரித்து உத்தரவுபிறப்பித்துள்ளது தேசிய தேர்வு முகமை. இது குறித்து கூறப்படுவதாவது: இளநிலை மருத்துவபடிப்பிற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவருகிறது. இதனிடையே இள நிலை மருத்துவ படிப்பிற்கான எழுத்து தேர்வை 3 மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரித்து உள்ளது. மொத்தம் உள்ள 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேர நிர்ணயம் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்கான எழுத்து தேர்வு இந்தாண்டு ஜூலை மாதம் 17 ம் தேதி நடைபெற … Read more

போர்டு உடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை.. எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, ஏற்றுமதிக்கு புதிய திட்டம்..!

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு மோட்டார்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வர்த்தகம் குறைந்த காரணத்தாலும், அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் சென்னை மற்றும் குஜராத்தில் இருக்கும் இரு தொழிற்சாலைகளைப் படிப்படியாக உற்பத்தியைக் குறைத்து விட்டு தொழிற்சாலைகளை மொத்தமாகத் மூட திட்டமிட்டது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை இருந்தது, இந்த நிலையைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு போர்டு மோட்டார்ஸ் சென்னை தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டில் போர்டு நிறுவனத்திற்கு இருக்கும் சப்ளையர்கள் … Read more

“சீனாவிடம் அனைத்தையும் விற்றதால்தான் இந்த நிலைமை!" – குமுறும் இலங்கை வியாபாரிகள்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துச் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடுகின்றன… மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ 500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. பேரிக்காய் கிலோ 1500-க்கு விற்கப்படுகிறது. கோத்தபய ராஜபக்‌சே இந்த நிலையில், இந்திய … Read more

குறிவைக்கப்படும் புடின் மகள்கள்! கசிந்த முக்கிய தகவல்

ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகள்  இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தாயராகியுள்ளன. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் கடுமையான புதிய தடைகள் ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து விதிக்கப்படும் … Read more