இந்திய பணக்காரர்களில் முதலிடத்திலும் உலக பட்டியலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி! போர்ப்ஸ் தகவல்…

2022ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஆய்வு பத்திரிகையான போர்பஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் 10-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி,  முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த நிதியாண்டு மேலும் 7 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், தற்போது, 9ஆயிரத்து 70 கோடி டாலருடன்  முதலிடத்தை பிடித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தாலும், உலக அளவில் 10வது … Read more

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு – முக்கிய சாட்சியான வழக்கறிஞர் திடீர் தற்கொலை

சென்னை: கடந்த 2017-ம் ஆண்டு முன்னான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.   இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில் டெல்லி போலீசார் கைது … Read more

அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு சொத்துக்களை எழுதி வைத்த மூதாட்டி| Dinamalar

டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 78 வயது மூதாட்டி, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, உயில் எழுதி வைத்துள்ளார்.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டேராடூனில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மூதாட்டி புஷ்பா முன்ஜியால், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை, காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் பெயரில் உயில் எழுதி உள்ளார்.இதற்கான ஆவணங்களை, அவர் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து, … Read more

சென்செக்ஸ் 566 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 17,800 அருகில் முடிவு.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் சந்தைகள் சரிவில் தான் முடிவடைந்துள்ளன. இது முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில், அதனை புராபிட் செய்ய முற்பட்டிருக்கலாம். இது சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்ய எது சிறந்த நிறுவனம்.. பட்டியல் போட்ட லிங்க்ட்இன்.. பட்டியலில் யாரெல்லாம்? தொடக்கம் எப்படி? இன்று … Read more

`சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழுந்துவிடும்' அமெரிக்காவை மிரட்டும் ரஷ்யா!

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடை உட்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யர்கள் யாரும் இப்போது அமெரிக்கா போக முடியாது; இதேபோல அமெரிக்கர்கள் ரஷ்யா போக முடியாது. ஆனால், இப்போதும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கமாக இணைந்து ஒரே ஒரு துறையில் பணியாற்றி வருகின்றன. அது, விண்வெளித் துறை. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து … Read more

உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்யா போர் செய்யும் திகதியை கடந்த ஆண்டே சரியாக கணித்த நபர் மரணம்!

உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்து போர் தாக்குதல் நடத்த தொடங்கிய நாளை முன்னரே சரியாக கணித்த ரஷ்ய அரசியல்வாதி விளாடிமிர் ஜிரிநோவஸ்கி உயிரிழந்துள்ளார். அதன்படி ரஷ்யன் லிபரல் டெமாகிரடிக் கட்சி தலைவர் விளாடிமிர் ஜிரிநோவஸ்கி மாஸ்கோ மருத்துவமனையில் உயிரிழந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் சபாநாயகர் வயசெஸ்லவ் வலோடின் கூறியுள்ளார். 75 வயதான ஜிரிநோவஸ்கி உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் … Read more

உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேகம் – வீடியோ

சேலம்: உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு இன்று ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக  கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்ப 146 அடி கொண்ட அழகன் முருகனுக்கு இன்று குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. 90 சிவாச்சாரிகளை கொண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் மலைப்பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலை … Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும்  என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நுழைவு தேர்வு … Read more

ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்வுடன் முதல்வர் ஜெகன் மோகன் சந்திப்பு

ஆந்திரா: ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனை முதலமைச்சர் ஜெகன் மோகன் சந்தித்து பேச உள்ளார். புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆந்திர அரசின் புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளது.