கைதிகளுக்கு பைபிள் எஸ்.பி.,யிடம் புகார்| Dinamalar

கதக், : கதக் மாவட்ட சிறைச்சாலையில், கைதிகளுக்கு கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் வழங்கி, பிரார்த்தனைக்கு அனுமதியளித்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்.பி.,யிடம் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.மாவட்ட சிறையில் உள்ள ஒருவரை சந்திக்க சென்ற ஹிந்து அமைப்பை சேர்ந்தவர், அங்கு கைதிகளுக்கு வினியோகிக்கப்பட்ட பைபிள் குறித்து கேட்டறிந்தார். பைபிளையும் புகைப்பட ஆதாரமாக சேகரித்து கொண்டார்.இது தொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை … Read more

முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு 11-ந் தேதி வரை சி.பி.ஐ. காவல்

மும்பை,  மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.   இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அனில் தேஷ்முக் மற்றும் அவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே, நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ரூ.100 கோடி … Read more

ஜேர்மனியில் கோவிட் விதிமுறையை தளர்த்தும் திட்டம் இல்லை: சுகாதார அமைச்சர் அறிவிப்பு

ஜேர்மனியில் COVID-19 தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்தும் திட்டம் கைவிடப்பட்டது. ஜேர்மனியில் கோவிட்-19 தோற்றால் பாதிக்கப்படுவோருக்கான கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை முடிவுக்குக் கொண்டுவரப்படாது என்று சுகாதார அமைச்சர் Karl Lauterbach கூறினார். தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்குவது இன்னும் அதிக தொற்றுநோய்களைத் தூண்டும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டதால் திட்டத்தை மாற்றியமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கொரோனா வைரஸ் ஒரு ஜலதோஷம் அல்ல. அதனால்தான் நோய்த்தொற்றுக்குப் பிறகு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்” என்று சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் ட்விட்டரில் கூறினார். மேலும், கட்டாய … Read more

லட்சுமி நரசிம்மர் கோவிலில் | Dinamalar

தங்கவயல் : ‘கோவிந்தா’ கோஷத்துடன் பிரசன்ன நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.தங்கவயல், கோரமண்டல், சுவாமிநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாமி பிரதிஷ்டாபனம் மற்றும் மஹா கும்பாபிஷேகம், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாமி விக்கிரக பிரதிஷ்டாபனையும், மஹா கும்பாபிஷேகமும் கடந்த 4 முதல், நேற்று வரை நடைபெற்றன.நேற்று காலை 7:30 … Read more

டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 கோடி போதைப்பொருள் சிக்கியது

புதுடெல்லி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ைலபீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் வந்து இறங்கினாா். அவா் லாகோஸ் நகரில் இருந்து டெல்லி வழியாக டோகா பயணம் செல்ல இருந்தார். அவரது உடமைகளை ெடல்லியில் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ெவள்ளை மற்றும் ெவளிர் வண்ணங்களில் ஏதோ மர்ம பவுடர் பொருள் இருந்தது. அதை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி ைவத்தனர். ேசாதனை முடிவில் அது கோகைன் ேபாைதப் ெபாருள் என்று தெரியவந்தது. மொத்தம் … Read more

வரிசை கட்டிய ரஷ்ய துருப்புகள்…ஒற்றை ஆளாய் தீர்த்துக்கட்டிய உக்ரைன் டாங்கி: வீடியோ ஆதாரம்!

உக்ரைனில் அத்துமீறி வரிசையாக நுழைந்த ரஷ்ய துருப்புகளை ஒற்றை T-64 ரக உக்ரைனிய டாங்கி அசால்ட்டாக சுட்டு வீழ்த்தியுள்ளது. உக்ரைனின் நோவா பாசன்(nova basan) பகுதிக்குள் வரிசையாக நுழைந்த ரஷ்ய ராணுவ துருப்புகளை அப்பகுதியில் இருந்த ஒற்றை T-64 ரக உக்ரைனிய தடுப்பு டாங்கி சுட்டு வீழ்த்தி ரஷ்ய துருப்புகளை கதிகலங்க வைத்துள்ளது. இந்த ஒற்றைT-64 ரக உக்ரைனிய தடுப்பு டாங்கி நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் இரண்டு ஆயுதம் தாங்கிய ரஷ்ய வாகனம் அழிக்கப்பட்டு உள்ளது. Footage … Read more

வட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம்| Dinamalar

பெங்களூரு : முந்தைய ஆண்டு தென் மேற்கு பருவ மழை, கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் கர்நாடகாவின் பல இடங்களில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது. சில இடங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால் வட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.முந்தைய ஆண்டு வழக்கத்தை விட, அதிகமான மழை கொட்டியதால், கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை இருக்காது என, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கொப்பல், பல்லாரி, விஜயநகர், கலபுரகி, ராய்ச்சூர், பீதர் மாவட்டங்களின், 350 … Read more

மாநிலங்களவையிலும் நிறைவேறிய குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா..!!

புதுடெல்லி,  தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளின் கைரேகை, விரல் ரேகை, பாத அளவு, புகைப்படம், கண்ணின் கருவிழி போன்ற ‘பயோ மெட்ரிக்’ அளவுகளை சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் அளிக்கும் குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா, ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், மாநிலங்களவையில் இம்மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கிரிமினல்களை விட போலீசார் எப்போதும் 2 படி முன்னால் இருக்க வேண்டும் என்பதற்காக, இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் … Read more

பிரித்தானியாவில் திருநங்கைகளால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறதா? போரிஸ் அதிரடி!

 பிரித்தானியாவில் பெண்கள் விளையாட்டு போட்டியில் திருநங்கைகள் பங்கேற்க கூடாது என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் நேற்று(புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகமெங்கும் இருக்கும் LGBT-களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு வந்த முதன்மை மாநாட்டை பிரித்தானியா கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் பங்கேற்பதை நான் முறையானதாக கருதவில்லை, இது மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாக இருக்கலாம் ஆனால் இத்தைகைய நடைமுறை … Read more

இந்திய பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டு 7.5 சதவீதமாக இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு  7.5 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளது.  அதன்படி,  தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இது அடுத்த ஆண்டு (2023) முதல் காலாண்டில் அது 7.4 சதவீதமாக உயரும் … Read more